பாஜகவில் இன்று இணைகிறாரா நடிகை கஸ்தூரி?

 

பாஜகவில் இன்று  இணைகிறாரா நடிகை கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அமித்ஷாவின் தமிழக வருகை பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்களுள் முக்கியமானவராக கருதப்படும் அமித்ஷா தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பல வியூகங்களை வகுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவில் இன்று  இணைகிறாரா நடிகை கஸ்தூரி?

இதுவொருபுறம் இருக்க திமுக முன்னாள் எம்.பி. கே. பி. ராமலிங்கம் இன்று பாஜகவில் இணைகிறார். அதேபோல் அமித்ஷா தமிழக வருகையையொட்டி நடிகை கஸ்தூரியும் பாஜகவில் இன்று இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “அமித்ஷா முன்னிலையில் நான் இன்று பாஜகவில் சேர்கிறேன் என்று தெரிவிக்கும் விதமாக எனக்கு தொலைபேசி அழைப்புகள் வருகிறது. வதந்திகள் யதார்த்தத்தை விட சக்திவாய்ந்தவை என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. நேற்று எனது மாலை பொழுதை முருகனுடன் கழித்தேன். பாஜக தலைவர் முருகன் அல்ல, கடவுள்களின் தளபதி முருகன். வேல் யாத்திரை எல்.முருகன் அல்ல, என் குலதெய்வம் வேல் முருகன்” என்று பதிவிட்டுள்ளார்.