Home அரசியல் ரஜினி கட்சி ஆரம்பிக்காததற்கு நடிகர் சிரஞ்சீவி காரணமா… எப்படி?

ரஜினி கட்சி ஆரம்பிக்காததற்கு நடிகர் சிரஞ்சீவி காரணமா… எப்படி?

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியல் மற்றும் திரை வட்டாரத்தில் அதிகம் ஒலிக்கப்பட்ட கேள்வி ‘ரஜினி எப்போது கட்சி தொடங்குவார்?’ என்பதுதான். அதற்கு சில நாட்களுக்கு முன் ரஜினி தெளிவாக நீண்ட அறிக்கையை வெளியிட்டு முற்றுப்புள்ளிவைத்தார்.

2017 ஆம் ஆண்டு டிசம்பரில். பேசிய ரஜினி விரைவில் கட்சித் தொடங்குவேன் என்றார். அது தள்ளிக்கொண்டே சென்றது. கொரோனா ஊரடங்கில் அது இன்னும் முடங்கியது. ஒருவழியாக இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அறிக்கை, ஜனவரியில் கட்சி என முடிவெடுத்த ரஜினி, ஹைதராபாத் சூட்டிங்கில் நேரடியாகக் கண்ட காட்சிகள் அரசியலுக்கு முழுக்கு போட வைத்துவிட்டன.

அவர் வெளியிட்ட அறிக்கையில் ’நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

ரஜினியின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று பல வழிகளின் ஆராய்ந்து எழுதுகிறார்கள். தற்போது இன்னொரு தகவலும் செய்திகளில் அடிபடுகிறது. இயக்குநர் சிவா இயக்கும் அண்ணாத்தே படத்தில் நடிக்க படப்பிடிப்புக்காக ’ஹைதராபாத்’ க்கு ரஜினி சென்றபோது இந்த முடிவு மாற்றம் நடந்தது.

ரஜினியின் இந்தத் திடீர் மாற்றத்திற்கு இரு நடிகர்கள்தாம் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இருவருமே ரஜினியின் மிக நெருக்கமான நண்பர்கள்தான். ஒருவர் நடிகர் சிரஞ்சீவி மற்றொருவர் நடிகர் மோகன்பாபு.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மோகன்பாபு தனக்கும் ரஜினிக்கும் இடையே உள்ள நட்பை ரொம்பவும் உரிமையோடு சொல்லியிருப்பார். அதேபோல சிரஞ்சீவியும் ரஜினிக்கு நீண்ட கால பழக்கம் உடையவரே. இம்முறை ஹைதராபாத் சென்ற ரஜினி, இந்த இருவரையும் சந்தித்து அரசியல் முடிவு குறித்து உரையாடினாராம்.

அப்போது இருவருமே அரசியல் பலவிதம் ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எதையும் நேரடியாக பேசும் உங்களுக்கு சரி வராது என்று கூறினார்கள். அதிலும் சிரஞ்சீவி தான் கட்சி தொடங்கியபோது ஏற்பட்ட சிக்கல்களை அனுபவப்பூர்வமாகப் பகிர்ந்துகொண்டாராம். அதன்பின் தான் ரஜினியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், இரு தரப்பிலிருந்து இது உறுதிப்பட்டுத்தும் விதமான செய்திகள் வர வில்லை.

மாவட்ட செய்திகள்

Most Popular

சாலை விதிமீறல் – திண்டுக்கல்லில் ஒரே நாளில் 2,100 வழக்குகள் பதிவு!

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது, போலீசார் 2 ஆயிரத்து 100 வழக்குகள் பதிவுசெய்தனர்.

திமுகவின் விருப்பமனு தாக்கல் நிறைவு! இத்தனை பேர் போட்டியிட விருப்பமா?

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டுமென திமுகவும் ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்...

மருதாணியால் கூந்தலுக்கு இத்தனை நன்மைகளா?

பழங்காலத்தில் இருந்தே அழகுக் குறிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது மருதாணி. விழாக் காலங்களில் கைகளில் அரைத்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்பட்ட மருதாணி, கூந்தல் பராமரிப்பிலும் இன்றியமையாததாக மாறிவிட்டது. பல இடங்களில்...

ஏப்ரல் மாதத்திற்குள் கேஸ், பெட்ரோல், டீசல் விலை குறையும்- அமைச்சர் தர்மேந்திர பிரதான்

வாரணாசியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான ரஷ்யா, கத்தார் மற்றும் குவைத்திடம், உற்பத்தியை அதிகரிக்க இந்தியா அழுத்தம்...
TopTamilNews