Home மாவட்டங்கள் திருப்பத்தூர் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி இருளர் இன மக்கள் மனு

ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி இருளர் இன மக்கள் மனு

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் குரும்பர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி 500-க்கும் மேற்பட்டவர்கள், சார் ஆட்சியரிடம் வழங்கினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குறும்பர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய குழந்தைகளின் பள்ளி படிப்பிற்கும், வேலைவாய்ப்புக்கும் தேவையான சாதி சான்றிதழை, எஸ்.டி பிரிவின் கீழ் வழங்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், குரும்பர் இனமக்களுக்கு எஸ்.டி., சான்றிதழ் அதிகாரிகள் வழங்க மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், குரும்பர் இன மாநில தலைவர் கொடி அண்ணன் தலைமையில், இன்று திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுக்க வந்திருந்தனர்.இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தொடர்ந்து, கொடிஅண்ணன் உள்ளிட்டோர் சார் ஆட்சியர் வந்தனா கார்கை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார். மனு குறித்து ஆய்வுசெய்து, ஒரு வார காலத்தில் முடிவை தெரிவிப்பதாக சார் ஆட்சியர் கூறினார்

மாவட்ட செய்திகள்

Most Popular

கோயம்பேட்டில் குவிந்த மக்கள் : போதிய பேருந்து வசதி இல்லாததால் நள்ளிரவில் போராட்டம்!

தொடர் விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் நேற்று இரவு மக்கள் கூட்டம் அலைமோதியது பரபரப்பு ஏற்பட்டது. வார இறுதி விடுமுறை...

வாகன விற்பனை அமோகம்… டிசம்பர் காலாண்டில் ரூ.1,556 கோடி லாபம் ஈட்டிய பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,556.3 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர...

லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது மகன் தேஜஸ்வி தெரிவித்திருக்கிறார்.

அந்த மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி… ஸ்டாலின் ஆவேசம்

காடுகளையும் யானைகளின் வழித்தடங்களையும் அழித்துதான் குடியிருப்புகளூம், சொகுசு விடுதிகளும் அமைக்கப்படுகின்றன. காட்டழித்துதான் விவசாயமும் செய்து வருகிறார்கள். இருக்கும் இடமும், உணவும் குறைந்தால் என்ன செய்யும் காட்டு விலங்குகள். இதனால்தான் யானைகள்...
Do NOT follow this link or you will be banned from the site!