அதிபர் ட்ரம்புக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

 

அதிபர் ட்ரம்புக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஈரான் அரசு கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

ஈரான் தலைநகர் பாக்தாத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தி ராணுவ தளபதி சொலைமானி இறப்புக்கு காரணமானதாக கூறி இந்த நடவடிக்கையை ஈரான் எடுத்துள்ளது. தளபதி சொலைமானி மரணத்திற்கு காரணமான ட்ரம்ப் மற்றும் 30 பேரை கைது செய்ய டெஹ்ரான் தலைமை நீதிபதி அலி அல்காசிமர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ட்ரம்ப்பின் பதவிக்காலம் முடிந்தாலும் அவர் மீதான பயங்கரவாத மற்றும் கொலைக்குற்றச்சாட்டு வழக்குகள் தொடரும் என்றும் நீதிபதி அல்காசிமர் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட பிறரை கைது செய்ய வசதியாக ரெட் கார்னர் நோட்டீசை பிறப்பிக்க வேண்டும் என்றும் அல்காசிமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிபர் ட்ரம்புக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு!

இதையடுத்து இன்டர்போல் அதிகாரிகள் பாரிஸில் அவசர கூட்டம் நடத்தி ஈரான் வேண்டுகோளை பிற உறுப்பு நாடுகளுக்கு அனுப்புவது குறித்து விவாதித்தனர். எனினும் இவ்விவகாரத்தின் அரசியல் முக்கியத்துவம் கருதி இன்டர்போல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்றே தெரிகிறது. ஈரான் புரட்சிப் படைத் தளபதியாக இருந்த ஜெனரல் சொலைமானி கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியிருந்தன.