• August
    24
    Saturday

Main Area

Main



காலை ஜிம் ஒர்க்கவுட்டில் விஜய்யின் "மாம்பழமா மாம்பழம்" பாடலுக்கு குத்தாட்டம்.. வைரலாகும் ஈரான் ஜிம் வீடியோ!!

ஜிம்
ஜிம்
Loading...

ஈரானில் உள்ள ஒரு ஜிம்மில் காலை ஒர்க்கவுட் இல் தமிழ் பாடல் ஒன்று இசைக்கப்பட்டு அதற்கு ஆட்டம் போடுவது போன்ற புதுவித பயிற்சி வீடியோ இணையதளத்தில் படு வைரலாகி வருகிறது.

பொதுவாக ஜிம் ஒர்க்கவுட் என்றால் குதிப்பது, ஓடுவது மற்றும் கை கால்களை நன்றாக நீட்டி மடக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குவது, மேலும் உடலை பலப்படுத்த பழக்கத்திற்கு ஏற்றார்போல் எடைகளை தூக்குவது போன்றவற்றைத்தான் நாம் வழக்கமாக கண்டிருப்போம். 

iran gym

ஆனால் ஈரான் நாட்டில் உள்ள ஜிம் ஒன்றில் காலை ஒர்க்கவுட் செய்யும் போது முதல் கட்டமாக பாடல் ஒன்றை இசைக்கச் செய்து அதற்கு ஏற்றார்போல் உடல் பாகங்களை அசைத்து குத்தாட்டம் போடும் பயிற்சியை பயிற்சியாளர் அங்கு இருப்பவர்களுக்கு செய்து காட்டுகிறார்.

அங்கு பயிற்சி மேற்கொள்பவர்களும் பாடலுக்கு ஏற்றார்போல் நடனமாடி உடல்களை நன்கு அசைத்து குத்தாட்டம் போடுகின்றனர். 

இந்த புதுவித செயலை ஜிம்மில் இருந்த ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். 

இந்த வீடியோவை கண்ட இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மறுபதிப்பு செய்து, "இது உண்மையா? எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதேபோன்று தினமும் காலை நான் செய்ய முடிவு செய்துள்ளேன். தமிழ் பாடல் ஒன்றை இசைத்து அதற்கு குத்தாட்டம் போடுவது அருமையாக உள்ளது" என்றார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் மிகவும் அதிகமாக பகிரப்பட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.