ஐகூ 3 வால்கனோ ஸ்மார்ட்போன் ஆரஞ்ச் நிற வேரியன்ட் இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

 

ஐகூ 3 வால்கனோ ஸ்மார்ட்போன் ஆரஞ்ச் நிற வேரியன்ட் இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

டெல்லி: ஐகூ 3 வால்கனோ ஸ்மார்ட்போன் ஆரஞ்ச் நிற வேரியன்ட் இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது.

ஐகூ 3 வால்கனோ ஸ்மார்ட்போன் ஆரஞ்ச் நிற வேரியன்ட் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. குவாண்டம் சில்வர் மற்றும் டொர்னாடோ பிளாக் வேரியன்ட்களில் உள்ள அம்சங்களே இந்த வேரியன்ட்டிலும் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விலை 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி மாடல் விலை ரூ.34,990 எனவும், 256ஜிபி மெமரி மாடல் விலை ரூ.37,990 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4ஜி மற்றும் 5ஜி மாடல்களாக ஐகூ 3 ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன.

இந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அதிகபட்சமாக 12 ஜிபி ரேம், டுயல் சிம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 48 எம்.பி பின்பக்க கேமரா செட்டப், 16 எம்.பி செல்பி கேமரா, ஹோல் பன்ச் டிஸ்பிளே, யு.எஸ்.பி டைப் சி, 4400 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 55வாட்ஸ் சூப்பர் பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் மற்றும் இதர கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 256ஜிபி மெமரி வேரியன்ட் ஆரஞ்ச் நிற சாதனம் கூடிய விரைவில் பிளிப்கார்ட் தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.