பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி

 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்த சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்பை வரவேற்பதாக அயோத்தி நில வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி தெரிவித்தார்.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி உள்பட பல பா.ஜ.க. தலைவர்கள முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தது. இதனால் நாட்டில் அப்போது பெரும் கலவரம் இடித்தது. பலரும் கொல்லப்பட்டனர். பாபர் மசூதி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட மொத்தம் 48 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோதே அதில் 16 பேர் இறந்து விட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி
இக்பால் அன்சாரி

28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. போதிய ஆதாரங்கள் இல்லை என்று பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்பட 32 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது. சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக அயோத்தி நில விவகாரத்தில் வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அது தொடர்பாக பலர் வழக்கு தொடர்ந்தார்கள்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்… புதிதாக பிரச்சினை உருவாக்காதீங்க… இக்பால் அன்சாரி
உச்ச நீதிமன்றம்

ஆனால் நாம் பிரச்சினை முடிவு வர வேண்டும், அதிகரிக்க கூடாது என விரும்பினோம்.அரசியலமைப்பையும், நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நாங்கள் மதிக்கிறோம். இப்போது நாட்டில் புதிய பிரச்சினை எதுவும் இருக்கக்கூடாது. அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தபோது, சிபிஐ வழக்கும் கடந்த ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும். 2019ல் பாபர் மசூதி நில வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த போது நாடு முழுவதும் அதனை வரவேற்றது. சி.பி.ஐ. வழக்கும் இன்று முடிவுக்கு வந்து இருப்பது நல்லது. இந்த 2019 நவம்பர் 9ம் தேதியுடன் முடிவடைந்து இருக்க வேண்டும் தேவையில்லாமல் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.