#IPLAuction2019 ஐ.பி.எல். ஏலம் 2019 Live Updates: எந்த அணியில் யாரு? யாருக்கு எவ்வளவு கோடி?

 

#IPLAuction2019 ஐ.பி.எல். ஏலம் 2019 Live Updates: எந்த அணியில் யாரு? யாருக்கு எவ்வளவு கோடி?

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசனுக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த போட்டிகளில் விளையாடும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏலப் பட்டியலில் 346 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதுதவிர, லாஸ்ட் என்ட்ரியாக 4 வீரர்களின் பெயர் சேர்க்கப்பட்டு, மொத்தம் 350 என பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும், தங்கள் அணியில் இருந்து சில வீரர்களை விடுவித்துள்ளன. அதற்கு பதில், புதிய வீரர்களை ஏலத்தில் எடுப்பதில் ஆர்வமாக உள்ளன.

மாலை 08.00: யுவராஜ் சிங் மும்பை அணிக்கு ரூ.1 கோடிக்கு ஏலம் விடப்பட்டார்.

மாலை 07.00: ஹென்ரிக் க்ளாசென் பெங்களூரு அணிக்கு ரூ.50 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டார்.

மாலை 06.53: ப்ரைண்டர் ஸ்ரன் மும்பை அணிக்கு ரூ.3.40 கோடிக்கு ஏலம் விடப்பட்டார்

மாலை 06.50: லாக்கி ஃபெர்குசன் கொல்கத்தா அணிக்கு ரூ1.60 கோடிக்கு ஏலம் விடப்பட்டார்

மாலை 06.45: தென் ஆப்பிரிக்க வீரர்கள் டேல் ஸ்டெயின், மோர்னி மோர்கெல்   ஏலம் போகவில்லை

மாலை 06.35: வீரர் ஹென்ரிக் க்ளாசென் பெங்களூரு அணிக்கு ரூ.50 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டார்

மாலை 06.30: ப்ரைண்டர் ஸ்ரன் மும்பை அணிக்கு ரூ.3.40 கோடிக்கு ஏலம் விடப்பட்டார்

மாலை 06.21: ஜேம்ஸ் நீஷாம், ஹாசிம் ஆம்லா, ஏஞ்சலோ மேத்யூஸ், ரிஷி தவான் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

மாலை 06.20: கோலின் இங்கிராம் டெல்லி அணிக்கு ரூ.6.40 கோடிக்கு ஏலம் விடப்பட்டார்

மாலை 06.15: ஐபிஎல் அணிகளின் கைகளில் மீதமிருக்கும் தொகை

மாலை 05.50: அன்குஷ் பெயன்ஸ், நத்து சிங் ஆகியோரை டெல்லி அணி தலா ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது

மாலை 05.45: பாபா இந்திரஜித், ஷெல்டன் ஜாக்சன், ஜலஜ் சக்ஸ்சேனா, அனுஜ் ராவத், கே.எஸ்.பரத், அருண் கார்த்திக் பாஸ்கர், அனிகேத் சவுத்ரி, இஷான் பொரல், ராஜ்னேஷ் குர்பானி ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

மாலை 05.40: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ரூ.8.40 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது

மாலை 05.35: ஷிவம் துபேவை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது

மாலை 05.31: ரூ.25 லட்சத்துக்கு சர்ஃபராஸ் கானை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது

மாலை 05.30: அர்மான் ஜாஃபர், அக்ஷ்தீப் நாத், ஆயுஷ் படோனி, சச்சின் பேபி ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

மாலை 05.25: அன்மோல் ப்ரீத் சிங் ரூ.80 லட்சத்துக்கு மும்பை அணிக்கு ஏலம் விடப்பட்டார்

மாலை 05.20: தேவ்தத் படிகல் பெங்களூரு அணிக்கு 20 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டார்

மாலை 05.08: ஃபவாத் அஹமத், ஆடம் சம்பா, கேரி பெய்ரீ ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

மாலை 05.07: ராகுல் ஷர்மாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. 

மாலை 05.05: மோகித் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது

மாலை 05.02: வருண் ஆரோனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது

மாலை 04.55: இந்திய வீரர் முகமது ஷமி ரூ.4.80 கோடிக்கு ஏலம் போனார்; பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது

மாலை 04.53: “இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு”; ஜெய்தேவ் உனாத்கட் ஏலம் எடுக்கப்பட்டது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்வீட்

மாலை 04.51: இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவை ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ்

மாலை 04.50: இலங்கை வீரர் லசித் மலிங்கா மும்பை அணிக்கு ரூ.2 கோடிக்கு ஏலம் விடப்பட்டார்

மாலை 04.45: இந்திய பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் ராஜஸ்தான் அணிக்கு ரூ.8.40 கோடிக்கு ஏலம் விடப்பட்டார்

மாலை 04.30: நிக்கோலஸ் புரான் பஞ்சாப் அணிக்கு ரூ.4.20 கோடிக்கு ஏலம் விடப்பட்டார்

மாலை 04.23: மேற்கிந்திய தீவுகள் வீரர் வர்திமான் சாஹா ரூ.1.20 கோடிக்கு ஹைதராபாத் அணி வாங்கியது

மாலை 04.20: இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை ரூ.2.20 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஏலத்தில் எடுத்தது.

மாலை 04.17: இந்திய வீரர் யுவராஜ் சிங்கை எந்த ஐபிஎல் அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை 

மாலை 04.15: மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷிம்ரன் ஹெட்மரை ரூ 4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி

மாலை 04.13: நமன் ஒஜ்ஹா முதல் விக்கெட் கீப்பராக ஏலத்தில் விடப்பட்டார்; ஆனால், அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை

மாலை 04.10: அக்‌ஷர் படேலை ரூ.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

மாலை 04.05: கர்லஸ் ப்ராத்வைட் கொல்கத்தா அணியால் ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்

மாலை 04.15: மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷிம்ரன் ஹெட்மரை ரூ 4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி

மாலை 04.05: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹனுமா விகாரியை, ரூ 2 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

மாலை 04.02: இந்திய வீரர்கள் மனோஜ் திவாரி, புஜாராவின் அடிப்படை விலை ரூ.50 லட்சம்; எந்த அணியும் அவர்களை ஏலம் எடுக்கவில்லை

மாலை 03.40: ஐபிஎல் 12-வது சீசன் போட்டிகளுக்கான ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தொடங்கியது