#IPL2021 : சூப்பர் ஓவர் வரை சென்று ஐதரபாத்தை தட்டித்தூக்கிய டெல்லி

 

#IPL2021 : சூப்பர் ஓவர் வரை சென்று ஐதரபாத்தை தட்டித்தூக்கிய டெல்லி

ஐபிஎல் தொடரின் 20வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரிதிவி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது , ஷிகர் தவான் 26 ரன்களில் ரசித் கான் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த ப்ரிதிவி ஷா 53 ரன்களில் ரன் அவுட் ஆகினார் . அதன்பின் வந்த கேப்டன் ரிசப் பன்ட் 37 ரன்கள் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் 34 ரன்களும் எடுத்தனர்.20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை குவித்தது. ஹைதராபாத் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Image

சென்னை மைதானத்தில் 160 என்ற சவாலான இலக்கை துரத்திய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் வார்னர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் பேர்ஸ்டாவ் களமிறங்கினர். வார்னர் 6 ரன்களில் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க , பேர்ஸ்டாவ் மற்றும் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ 18 பந்துகளில் 38 ரன்கள் குவித்து அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் சிங்-யும் 4 ரன்களில் வெளியேறினார் அவேஷ் கான். இதன்பின் கடந்த வருடம் சென்னை அணிக்காக ஆடி பெரிதும் விமர்சிக்கப்பட்ட கேதார் ஜாதவ் களமிறங்கி 9 ரன்னில் அமித் மிஸ்ரா பந்துவீச்சு ஸ்டம்பிங் ஆனார்.நிதானமாக ஆடிய கேன் வில்லியம்சன் 42 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்பாடா வீசிய அந்த ஓவரில் ஐதராபாத் அணி 15 ரன்கள் எடுக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

Image

சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணி சார்பில் வார்னர் மற்றும் வில்லியம்சன் களமிறங்க , டெல்லி அணியின் சார்பாக அக்சர் படேல் பந்து வீசினார். இந்த ஊரில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்தது. 8 என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணியின் ஆட்டக்காரர்களாக ரிஷப் பண்ட் மற்றும் தவான் களமிறங்கினர். ரசித் கான் வீசிய அந்த ஓவரில் டெல்லி அணி கடைசி பந்தில் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது