ஐபிஎல்- பெங்களூருவை பந்தாடிய கொல்கத்தா

 

ஐபிஎல்- பெங்களூருவை பந்தாடிய கொல்கத்தா

நடப்பு ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

ஐபிஎல்- பெங்களூருவை பந்தாடிய கொல்கத்தா

டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர்.கோலி 5 ரன்னில் பிரதீஷ் கிருஷ்ணா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.படிக்கல் 22 ரன்னில் லாக்கி ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த ஸ்ரீகர் பரத்தும் 16 ரன்களில் ரசல் பந்துவீச்சில் வெளியேறினார்.அதிரடி வீரர்களான ஏபி டி வில்லியர்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் மேக்ஸ்வெல் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆர்சிபி அணியின் ஸ்கோர் சரிந்தது.19 ஓவர் முடிவில் பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

93 என்ற எளிய இலக்குடன் தொடங்கிய கொல்கத்தா அணி துவக்க ஆட்டகாரர்களாக கில் மற்றும் வெங்கடேஷ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்கள்.10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பின்றி 94 ரன்கள் சேர்த்து கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி தரப்பில் கில் 48 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்,வெங்கடேஷ் 41 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் கொல்கத்தா அணி புள்ளிபட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது.