#IPL2021: முதல் போட்டியிலேயே டெல்லியிடம் தோற்ற சென்னை

 

#IPL2021: முதல் போட்டியிலேயே டெல்லியிடம் தோற்ற சென்னை

ஐபிஎல் தொடரின் 14வது சீசனின் 2வது போட்டி , மும்பையில் நடைபெற்றது முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.

189 என்ற இலக்குடன் தனது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 6 ஓவர்களில் 65 ரன்களை எட்டியது. பிரித்வி ஷா 27 பந்துகளில் அரைசதம் அடிக்க , ஷிகர் தவான் தனது பங்கிற்கு 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த விக்கெட்டை பிரிக்க தோனி 6 பந்து வீச்சாளர்களையும் பயன்படுத்தினார். ஒருவழியாக டுவைன் பிராவோ, அபாரமாக ஆடி வந்த பிரித்வி ஷாவை 72 ரன்களில் வீழ்த்தினார்.

Image

பின்னர் கேப்டன் ரிசப் பன்ட் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய தவான் 84 ரன்களில் , தாகூர் ஓவரில் ஆட்டமிழந்தார். 18.5 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்க்கு 190 எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணியின் கேப்டன் பன்ட் ஆட்டம் இழக்காமல் 15 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.