ஐபிஎல்: டெல்லியை பந்தாடிய மும்பை!

 

ஐபிஎல்: டெல்லியை பந்தாடிய மும்பை!

ஐபிஎல் கிரிக்கெட்டில் பிளே ஆப் ஆட்டங்கள் இன்று முதல் துவங்கின. இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேற நடைபெறும் தகுதிச்சுற்று முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியிலிருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் டி காக் களமிறங்கினார். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அளித்தார். அதன்பிறகு மும்பை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினார். டி காக் 40 ரன்களிலும்,சூர்யகுமார் யாதவ் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிகட்டத்தில் ஜோடி சேர்ந்த இஷா கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டனர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எட்டியது. இஷான் கிஷான் 55 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 37 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஐபிஎல்: டெல்லியை பந்தாடிய மும்பை!

201 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்ததது. டெல்லி அணி தன் ரன் கணக்கை துவங்கும் முன்பே பிரித்திவி ஷா, ரஹானே மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்து ஐயர் 12 ரன்னிலும்,பன்ட் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டாய்னிஸ் மட்டும் அதிகபட்சமாக 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த டெல்லி அணி நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளது.