ஐபிஎல்: கடைசி ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி

 

ஐபிஎல்: கடைசி ஓவரில் டெல்லி அணி த்ரில்  வெற்றி

ஐபிஎல் தொடரின் 30 ஆவது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக பிரித்திவி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஜோஃப்ரா ஆர்ச்சரின் துல்லியமான பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினார் பிரித்திவி ஷா. தொடர்ந்து அஜின்கியா ரகானே களமிறங்கினார். எதிர்பாராத விதமாக ஆர்ச்சரின் அடுத்த ஓவரிலேயே அஜின்கியா ரகானே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவான் உடன் ஜோடி சேர்ந்தார். ஷிகர் தவான் 57 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல்: கடைசி ஓவரில் டெல்லி அணி த்ரில்  வெற்றி

தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். அதிரடி துவக்கம் கொடுத்த பட்லர் 22 ரன்களிலும் மற்றும் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பிறகு வந்த சாம்சங் 25 இரண்டிலும் மற்றும் உத்தப்பா 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை மட்டுமே எடுத்தது.ன்டெல்லி கேப்பிடல் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.