பென் ஸ்டோக்ஸ் சதத்தால் மும்பை இந்தியன்சை அடித்து நொறுக்கியது ராஜஸ்தான்

 

பென் ஸ்டோக்ஸ் சதத்தால் மும்பை இந்தியன்சை அடித்து நொறுக்கியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் 45-வது லீக்கில் பொல்லார்டு தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. மும்பை கேப்டன் ரோகித் சர்மா காயத்திலிருந்து முழுமையாக இன்னும் குணம் ஆகாததால், இந்த ஆட்டத்திலும் பொல்லார்டே கேப்டனாக செயல்பட்டார்.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. துவக்க ஆட்டக்காரர்களாக இஷன் கிஷன் மற்றும் டி காக் களமிறங்கினர். டி காக் 6 ரன்களில் வெளியேற அதன்பிறகு இஷன் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். கிஷன் கிஷன் 37 ரன்களிலும்,சூர்யகுமார் யாதவ் 40 ரன்களிலும் வெளியேறினர். இறுதி கட்டத்தில் வந்த ஹர்திக் பாண்டியா ராஜஸ்தான் பந்து வீச்சை சிக்ஸர்களாக பறக்க விட்டார். அதிரடியாக ஆடிய பாண்டியா 21 பந்துகளில் , 7 சிக்ஸர்கள் உட்பட 60 ரன்களைக் குவித்தார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.

பென் ஸ்டோக்ஸ் சதத்தால் மும்பை இந்தியன்சை அடித்து நொறுக்கியது ராஜஸ்தான்

196 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உத்தப்பா 13 ரன்களிலும் கேப்டன் ஸ்மித் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்து மும்பை பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்தார். 18.2 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. பென் ஸ்டோக்ஸ் 107 ரன்களுடனும் , சஞ்சு சம்சன் 54 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது.