பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு!

 

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு!

ஐபிஎல் திருவிழா தொடக்கமே சூடு பிடித்துவிட்டது. முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். டெல்லி கேபிட்டல்ஸூம் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதிய இரண்டாம் போட்டி இன்னும் பரபரப்பானது. இரு அணிகளின் ஸ்கோரும் சமனாக சூப்பர் ஓவரில் டெல்லி வென்றது. இன்று ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சு!

ஐபிஎல் தொடரின் 3வது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதிரடி பேட்ஸ்மேன் கோலி கேப்டனாக இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த ஆண்டாவது வெற்றிக்கோப்பையை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.