ஐபிஎல்: கோலி, டிவில்லியர்ஸின் அசத்தல் ஆட்டத்தால் பெங்களூரு அணி வெற்றி

 

ஐபிஎல்: கோலி, டிவில்லியர்ஸின் அசத்தல் ஆட்டத்தால் பெங்களூரு அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 28 ஆவது ஆட்டத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் படிக்கல் இறங்கினர். படிக்கல் 32 ரன்களிலும் ஆரோன் பின்ச் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பிறகு கேப்டன் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தனர் . கோலி நிதானமாக ஆட ஏபிடி வில்லியர்ஸ் பந்தை நாலாபுறமும் விரட்டினார். சிறப்பாக ஆடிய டிவில்லியர்ஸ் 6 சிக்சர்கள் விளாசினார். டிவில்லியர்ஸ் 73 ரன்களுடனும் கோலி 33 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 194 ரன்களை எடுத்திருந்தது.

ஐபிஎல்: கோலி, டிவில்லியர்ஸின் அசத்தல் ஆட்டத்தால் பெங்களூரு அணி வெற்றி


பிறகு களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் டாம் பான்டன் களமிறங்கினர், பான்டன் 8 ரன்களிலும் சுப்மன் கில் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசல் மற்றும் மார்கன் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர், 20 ஓவர் முடிவில் 112 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி, பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது.