ஐபிஎல்: 16.5 ஓவரிலேயே கொல்கத்தாவை தோற்கடித்த மும்பை

 

ஐபிஎல்: 16.5 ஓவரிலேயே கொல்கத்தாவை தோற்கடித்த மும்பை

ஐபிஎல் தொடரின் 32 ஆவது ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் திரிபாதி களமிறங்கினர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே மும்பை பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் 10 ஓவர்களில் 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறிக் கொண்டிருந்தது. பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் மோர்கன் மற்றும் பந்துவீச்சாளர் கம்மின்ஸ் பொறுப்பாக ஆடினர். மோர்கன் நிதானம் காட்ட பேட் கம்மின்ஸ் அதிரடியாக ஆடி அரை சதத்தை கடந்தார். கம்மின்ஸ் 53 ரன்களுடனும் கேப்டன் மார்கன் 39 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது. மும்பை தரப்பில் ராகுல் சாகர் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஐபிஎல்: 16.5 ஓவரிலேயே கொல்கத்தாவை தோற்கடித்த மும்பை

149 என்ற இலக்குடன் மும்பை அணியிலிருந்து ரோகித் மற்றும் டி காக் இறங்கினர். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. ரோகித் 35 ரன்களும் மற்றும் சூர்யகுமார் யாதவ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக 16.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே 149 ரன்களை மும்பை அணி எட்டி வெற்றியை தழுவியது. டி காக் 78 ரன்களுடனும் ஹர்திக் பண்டியா 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.