ராஜஸ்தானை தட்டித்தூக்கிய பெங்களூரு அணி! விறுவிறு ஆட்டம்..

 

ராஜஸ்தானை தட்டித்தூக்கிய பெங்களூரு அணி! விறுவிறு ஆட்டம்..

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுர் Vs ராஜஸ்தான் ராயல்ஸ். இரு அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வென்றிருக்கிறது. டாஸ் வின் பண்ணிய ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார்.

ராஜஸ்தானை தட்டித்தூக்கிய பெங்களூரு அணி! விறுவிறு ஆட்டம்..

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஜோஸ் பட்லரும் கேப்டன் ஸ்மித்தும் இறங்கினார்கள். முதல் 5 ஓவர்களுக்குள் பட்லர், கேப்டம் ஸ்மித், சஞ்சு சாம்சன் ஆகிய மூன்று முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ராபின் உத்தப்பா – லோம்ரோர் இருவரின் பார்டன்ஷிப் மெதுவாக ஆடி ரன்களை குவித்தது. ராகுல் திவேட்டியா, ஆர்ச்சரும் அதிரடியாக விளையாடி, 20 ஓவர்களை இழந்து 154 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணிக்கு 155 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி.

தொடர்ந்து பெங்களூரு அணியிலிருந்து படிக்கலும் பிஞ்சும் களமிறங்கினர். மூன்றாவது ஓவரில் பிஞ்ச் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். படிக்கல்- விராட்கோலி கூட்டணியில் போட்டி விறுவிறுப்பாக சென்றது.63 ரன்களில் படிக்கல் ஆட்டமிழந்தார். 72 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்று விளையாடி அதிரடி காட்டினார். டி வில்லியர்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். 19.1 ஓவர் முடிவில் 158 ரன்கள் எடுத்து ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது பெங்களூரு. இந்த வெற்றியின்மூலம் புள்ளி பட்டியலில் பெங்களூரு அணி முதலிடத்திற்கு முன்னேறியது.