ஐபிஎல் : சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல் வெற்றி

 

ஐபிஎல் : சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல் வெற்றி

ஐபிஎல் 2020 – தொடரின் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புடன் செல்கிறது. முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். டெல்லி கேபிட்டல்ஸூம் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதிய இரண்டாம் போட்டி இன்னும் பரபரப்பானது. இரு அணிகளின் ஸ்கோரும் சமனாக சூப்பர் ஓவரில் டெல்லி வென்றது. நேற்று ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத். டி வில்லியர்ஸ் பேட்டிங், சோஹலின் பவுலிங்கால் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஐபிஎல் : சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல் வெற்றி

இந்நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மோதியது ராஜஸ்தான் ராயல் அணி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 20 ஓவர்கள் முடிவில் சி.எஸ்.கே அணி 6 விக்கெட் இழப்பில் 200 ரன்கள் எடுத்ததால் தோல்வியை தழுவியது.