ஐபிஎல்: டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

 

ஐபிஎல்: டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 37வது ஆட்டத்தில் , ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் , கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

ஐபிஎல்: டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அய்யர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரித்திவி ஷா களம் இறங்கினர்.பிரித்திவி ஷா 7 ரன்களிலும் , அடுத்து வந்த கேப்டன் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் ஷிகர் தவான் மட்டும் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். கடந்த போட்டியில் சென்னைக்கு எதிரான ஆட்டத்திலும் ஷிகர் தவான் அற்புதமாக ஆடி சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டு சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ஷிகர் தவான். 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எட்டியது. தவான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 106 விளாசினார்.

ஐபிஎல்: டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி

165 என்ற வெற்றி இலக்குடன் தனது இன்னிங்சை தொடங்கியது பஞ்சாப் அணி. கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்தத் தொடரில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கே எல் ராகுல் இன்று 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பிறகு வந்த கிறிஸ் கெயில், துஷார் தேஷ்பாண்டேவின் ஒரே ஓவரில் 2 சிக்சர்கள் உட்பட ஐந்து பவுண்டரிகளை பறக்கவிட்டார். அடுத்த ஓவரிலேயே அஸ்வின் சுழலில் சிக்கிய கெயில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.மயங்க் அகர்வால் 5 ரன்களில் ரன் அவுட் ஆக பஞ்சாப் அணிக்கு நெருக்கடியானது. பிறகு நிக்கலஸ் பூரன் மற்றும் மேக்ஸ்வல் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய பூரன் 53 ரன்களிலும் மற்றும் 32 ரன்களிலும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியாக 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி அபார வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.