ஐபிஎல்: பெங்களூரு அணியை பந்தாடிய ஹைதராபாத் அணி!

 

ஐபிஎல்: பெங்களூரு அணியை பந்தாடிய ஹைதராபாத் அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 52 ஆவது ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது.

பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக ஜோஸ் பிலிப்பி மற்றும் படிக்கல் களமிறங்கினர். படிக்கல் 5 ரன்கள் எடுத்திருந்தநிலையில், ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலியும் 7 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பிலிப் 32 ரன்கள் எடுத்த நிலையில் டி வில்லியர்ஸ் 24 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து குர்கீட் சிங் 15 ரன்களும் சிராஜ் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் வித்தியாசத்தில் 120 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல்: பெங்களூரு அணியை பந்தாடிய ஹைதராபாத் அணி!

121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி களமிறங்கியது. டேவிட் வார்னர் 8 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியை அளித்தார். சாஹா 39 ரன்களிலும், மணிஷ் பாண்டே 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா தலா 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இறங்கிய ஜாசன் 26 ரன்கள் மற்றும் அப்துல் சாமத் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக 14.1 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்த ஹைதராபாத் அணி 121 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது.