செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் போட்டிகள்: ஐபிஎல் தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. 

13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தலைகாட்ட தொடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது.

IPL

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. 

இந்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது என ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடத்த முடியாத சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும். செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டி துவங்கவுள்ள நிலையில் நவம்பர் 8 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

#BREAKING: “ரூ.42 ஆயிரத்தை எட்டியது தங்க விலை”.. சவரனுக்கு ரூ.792 உயர்ந்து புதிய உச்சம்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக...

இந்தியாவிலேயே முதன் முறையாக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற அம்மா கோவிட்19 வீட்டு பராமரிப்பு திட்டம்! – எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்

கொரோனா நோயாளிகள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு என்ற சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். தமிழக அரசின் கடும் நடவடிக்கை காரணமாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...

பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை 8.52 லட்சம் வழக்குகள் பதிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை மூலமாக தான் நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதால், இந்த கொடிய...

மதுரையில் குறையும் கொரோனா பரவல் : அமைச்சர் உதயகுமார் தகவல்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் மேலும் 95...