ஐ.பி.எல் இறுதி போட்டி நவம்பர் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்!

13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தலைகாட்ட தொடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடத்த முடியாத சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மும்பையில் ஐபிஎல் நிர்வாக குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆலோசனையில் இறுதி போட்டிக்கான தேதி நவம்பர் 10-ஆம் தேதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போட்டிகள் வழக்கமான 8 மணிக்கு தொடங்காமல், 7.30 மணி அளவில் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக செப்டம்பர் 19-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நவம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

Most Popular

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும்...

சிறிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி!

சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு வருகிறது. அதன்...

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாக இருக்கிறது. தேர்வு நடத்தப்படாத நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வை வைத்து மாணவர்களின் ரிசல்ட் வெளியிடப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறுவதாக இருந்த...

“பாலில் மருந்து பிறகு பலருக்கு விருந்து” பிரபல அனாதை இல்லத்தில் பெண்கள் பலாத்காரம் -பதினாலு வயது பெண் மூலம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா...