ஐபிஎல்: கொல்கத்தாவை மீண்டும் பந்தாடிய பெங்களூரு…

 

ஐபிஎல்: கொல்கத்தாவை மீண்டும் பந்தாடிய பெங்களூரு…

ஐபிஎல் கிரிக்கெட்டின் 39வது ஆட்டத்தில் , விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

துவக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சால் கொல்கத்தா அணி அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தது. முகமது சிராஜ் பவர் பிளேயில் மிக அருமையாக பந்துவீசி, 2மெய்டன்களுடன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து சாகல், வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் கொல்கத்தா அணி திணறியது. கேப்டன் மோர்கன் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி, அதிகபட்சமாக 30 ரன்களை எடுத்தார். பெங்களூரு தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் சாகல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இறுதியாக கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 84 ரன்களை எடுத்தது.

ஐபிஎல்: கொல்கத்தாவை மீண்டும் பந்தாடிய பெங்களூரு…

85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சொற்ப இலக்குடன் பலப்பரீட்சை நடத்தியது பெங்களூரு. துவக்க ஆட்டக்காரர்களாக படிக்கல், பிஞ்ச் களமிறங்கினர். படிக்கல் 25 ரன்களிலும், பிஞ்ச் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் கோலி மற்றும் குர்கீரட் ஜோடி களம்கண்டது. கோலி 17 ரன்களும், குர்கீரட் 21 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 13.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 85 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்த கொல்கத்தா அணிக்கு, பிளே ஆஃபில் நுழைவது சிக்கலாகியுள்ளது.