சென்னைக்கு அடுத்த தோல்வி! 37 ரன்களில் வெற்றி கண்டது பெங்களூரு அணி…

 

சென்னைக்கு அடுத்த தோல்வி! 37 ரன்களில் வெற்றி கண்டது பெங்களூரு அணி…

ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் துபாயில் 7.30 மணிக்கு தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதேபோல் சென்னை அணியில் கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு ஜெகதீசன் சேர்க்கப்பட்டார்

முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்கார்களாக படிக்கல்லும், பின்ஞ்சும் களமிறங்கினர். அதிகபட்சமாக படிக்கல் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தார். அதன்பிறகு தனி ஒருவனாக களத்தில் இறங்கிய விராட் கோலி 90 ரன்களை எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

சென்னைக்கு அடுத்த தோல்வி! 37 ரன்களில் வெற்றி கண்டது பெங்களூரு அணி…

அடுத்ததாக சென்னை அணியிலிருந்து களமிறங்கியது வாட்சன் மற்றும் டு பிளிஸ்சிஸ் ஜோடி. கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, இன்றைய போட்டியில் பெரிதாக விளையாடவில்லை. இதையடுத்து களமிறங்கிய ஜெகதீசன், ராயுடுவும் எதிர்ப்பார்த்த அளவு விளையாடதால் சென்னை அணிக்கு தோல்வி பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியது. சரி தோனி வந்தால் சரியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களின் மனதை கூல் படுத்தும் விதமாக மூன்றாவது ஜோடியாக சாம் கரணும், தோனியும் களமிறங்கினார். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தோனி 6 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார். சரி கேப்டன் தான் அப்படி, என்றால் அவரது ஜோடி சாம் கரண் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தினார். இறுதியாக களமிறங்கிய ஜடேஜா மற்றும் பிராவோ இணையும் முறையாக விளையாடதால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.