ஐபிஎல்: சென்னையை தோற்கடித்து ராஜஸ்தான் அணி வெற்றி! சென்னையின் பிளே ஆஃப் கனவு கானல் நீரானது

 

ஐபிஎல்: சென்னையை தோற்கடித்து ராஜஸ்தான் அணி வெற்றி! சென்னையின் பிளே ஆஃப் கனவு கானல் நீரானது

ஐபிஎல் கிரிக்கெட்டின் 36வது ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரர்களாக சாம் கரன் மற்றும் டுப்லஸ்ஸிஸ் களம் இறங்கினார். பாப் டு பிளசிஸ் 10 ரன்களிலும், சாம் கரன் 22 ரன்களிலும், வாட்சன் 8 ரன்களிலும், ராயுடு 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு கேப்டன் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். தோனி 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 35 ரன்களை எடுத்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது. இன்று சென்னை அணியின் சார்பில் ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே அளிக்கப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

ஐபிஎல்: சென்னையை தோற்கடித்து ராஜஸ்தான் அணி வெற்றி! சென்னையின் பிளே ஆஃப் கனவு கானல் நீரானது

126 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ஸ்டோக்ஸ் 19 ரன்களிலும், உத்தப்பா 4 ரன்களிலும், சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகியும் அதிர்ச்சி அளித்தனர். பிறகு கேப்டன் ஸ்மித் மற்றும் பட்லர் ஜோடி சேர்ந்தனர். ஸ்மித் நிதானமாக ஆட, பட்லர் ஒருபுறம் அதிரடியாக விளையாடினார். முடிவில் 17.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து, 126 ரன்களை எட்டியது. பட்லர் 70 ரன்களுடனும் , ஸ்மித் 26 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் நின்றனர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியிலும் சென்னை அணி தோல்வியடைந்ததால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தோல்வி மூலம் சென்னை அணியின் பிளே ஆஃப் கனவு ஏறக்குறைய தகர்ந்தது. இனி வரும் அனைத்து போட்டிகளில் வென்று மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொருத்து பிளே ஆஃப் வாய்ப்பு அமையும். இதனால் சென்னை ரசிகர்களின் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.