ஐபிஎல் – வரலாற்று வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைக்க காரணமான இருவர்

ஐபிஎல் – வரலாற்று வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைக்க காரணமான இருவர்

ஐபிஎல் திருவிழாவில் நேற்றைய போட்டி மகத்தானது. ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐபிஎல் – வரலாற்று வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைக்க காரணமான இருவர்

டாஸ் வின் செய்த ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். வழக்கமாக பெரும்பாலான கேப்டன்கள் எடுக்கும் முடிவே இது.

ஐபிஎல் – வரலாற்று வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைக்க காரணமான இருவர்

பஞ்சாப் அணியில் ஓப்பனிங் இறங்கிய கேப்டன் ராகுல் மற்றும் மயங் அகர்வால் ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டே 16.3 ஓவரில்தான் விழுந்தது. அதுவரை ராஜஸ்தான் பவுலர்கள் என்னென்ன செய்தும் விக்கெட் விழவில்லை.

ஐபிஎல் – வரலாற்று வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைக்க காரணமான இருவர்

மயங் அகர்வால் அற்புதமாக ஆடி சதம் அடித்தார். 50 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். அதில் 7 சிக்ஸ், 10 ஃபோர்களும் அடக்கம். டாம் கருன் வீசிய பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த ஓவரில் 69 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர். அப்போது அணியின் ஸ்கோர் 194. அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் – பூரன் ஜோடி 223 எனும் பெரும் ஸ்கோரை அடித்தது.

ஐபிஎல் – வரலாற்று வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைக்க காரணமான இருவர்

224 ரன்கள் அடித்தால் ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை சேஸிங் செய்த அணி என்ற பெருமையைப் பெறலாம் என்று களத்தில் இறங்கியது ராஜஸ்தான் டீம்.

ஐபிஎல் – வரலாற்று வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைக்க காரணமான இருவர்

ஓப்பனிங் இறங்கிய ஜோஸ் பட்லரும் ஸ்மித் ஜோடியில் பட்லர் 4 ரன்களோடு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் நிலைத்து ஆடினார்.

இந்த இருவரின் பார்டனர்ஷிப் ரன் ரேட் குறையாமல் கொண்டு சென்றனர். 27 பந்துகளில் அரை சதம் அடித்த ஸ்மித் நீஷம் வீசிய பந்தைத் தூக்கி அடித்த போது ஷமியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர்.

ஐபிஎல் – வரலாற்று வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைக்க காரணமான இருவர்

ஆனாலும், சஞ்சு சாம்சன் நிலைத்து ஆடியதால் வெற்றி வாய்ப்பு ராஜஸ்தான் பக்கமே இருந்தது. இந்த நிலையில் இறங்கிய ராகுல் திவேட்டியா பலரின் பொறுமையைச் சோதித்தார். ஒரே மாதிரியான ஷாட்களை ஆட முயன்று ஒரு பந்தும் பேட்டில் படாமல் திணறினார். இதனால், எதிரில் ஆடிய சஞ்சு சாம்சனுக்கு ஸ்ட்ரைக் குறைந்தது. அணியின் ஸ்கோர் வெகுவாகக் குறைந்து எடுக்க வேண்டிய ரன்கள் அதிகரித்துகொண்டே சென்றது.

ஐபிஎல் – வரலாற்று வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைக்க காரணமான இருவர்

42 பந்துகளில் 85 ரன்களைக் குவித்த சஞ்சு சாம்சன் ஷமி போட்ட பவுன்சரை அடிக்க முயன்று விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர். இவர் அவுட்டானதும் ராஜஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு கை நழுவிபோனதாகவே கருதப்பட்டது. ஏனெனில் ராகுல் திவேட்டியா பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறார் அல்லவா…

ஐபிஎல் – வரலாற்று வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைக்க காரணமான இருவர்

அப்போதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஷெல்டன் காட்ரெல் வீசிய ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசினர். இதனால் வெற்றி வாய்ப்பு மீண்டும் ராஜஸ்தான் டீம் பக்கம் வந்தது. அதை விட்டுவிடாமல், ஜாப்ரா ஆர்ச்சரும் இறங்கியதும் 2 சிக்ஸர்கள் அடித்தார்.

ராகுல் திவேட்டியா 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார் திவேட்டியா. வெற்றி ஷாட்டை திவேட்டியா அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஷமி வீசிய பந்தில் மயங் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஐபிஎல் – வரலாற்று வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைக்க காரணமான இருவர்

20 ஓவர் முடிவடைய 3 பந்துகள் மிச்சமிருக்கும் நிலையில் டாம் கருன் ஃபோர் அடித்து ராஜஸ்தான் டீமுக்கு வரலாற்று வெற்றியைச் சொந்தமாக்கினார்.

224 ரன்கள் எனும் பெரும் ஸ்கோரை வென்றதுமூலம் சேஸிங்கில் அதிக ரன்களை அடித்த முதல் டீம் எனும் சாதனையைப் பெற்றிருக்கிறது ராஜஸ்தான் டீம்.

ஐபிஎல் – வரலாற்று வெற்றி ராஜஸ்தானுக்குக் கிடைக்க காரணமான இருவர்

இந்தச் சாதனைக்கு இருவர் காரணம். ஒருவர் ஒன் டவுன் இறங்கி 85 ரன்கள் குவித்து தந்த சஞ்சு சாம்சன். அடுத்த வீரர் ராகுல் திவேட்டியா. ஆம், இவரால்தான் ராஜஸ்தான் அணியின் வெற்றி பறிபோக விருக்கிறது என்று கருதப்பட்ட நிலையில் ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.