ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா!

 

ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 54-வது ஆட்டத்தில் , ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா!

வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் முன்னேற முடியும் என்பதால் இவ்விரு அணிகளும் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ராணா களமிறங்கினர். ஆனால் ரன் எதுவும் எடுக்காமல் ராணா தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்து அணியின் ரன்னை உயர்த்தினர். சுப்மன் கில் 36 ரன்களிலும், ராகுல் திரிபாதி 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிகட்டத்தில் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் ரஸல் அதிரடியாக ஆடினார். ரஸல் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7விக்கெட்களை இழந்து 196 ரன்கள் எடுத்தது. மோர்கன் 68 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Image

192 என்ற கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்கமே மோசமாக அமைந்தது. உத்தப்பா 6 ரன்களிலும்,பென் ஸ்டோக்ஸ் 18 ரன்களிலும்,ஸ்மித் 4 ரன்களிலும் சாம்சன் ஒரே ஒரு ரன்னிலும், ரியான் பராக் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ஜோஸ் பட்லர் மற்றும் திவாட்டிய ஜோடி சேர்த்தனர். ஜோஸ் பட்லர் 35 ரன்களிலும், திவாட்டிய 31 ரன்களிலும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுத்து கொல்கத்தாவிடம் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது. மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து கொல்கத்தா அணி பிளே ஆஃப்க்கு முன்னேறும். இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்தது. தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து , புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.