மீண்டும் ரிஸ்க் வேண்டாம்… ஐபிஎல் தொடரை வெற்றிக்கரமாக முடிக்க பிசிசிஐ சூப்பர் பிளான்!

 

மீண்டும் ரிஸ்க் வேண்டாம்… ஐபிஎல் தொடரை வெற்றிக்கரமாக முடிக்க பிசிசிஐ சூப்பர் பிளான்!

கொரோனா பரவலை மீறி கடந்த ஆண்டு துபாயில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடித்தது. இம்முறையும் பிசிசிஐக்கு கடும் சவால் காத்திருந்தது. மார்ச் மாதம் வரை அமைதியாக இருந்த கொரோனா, ஐபிஎல் தொடங்கிய ஏப்ரல் மாதத்திலிருந்து இரண்டாம் அலை வேகமெடுத்தது. இதனால் வீரர்கள் அனைவருக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனைவருக்கும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் ரிஸ்க் வேண்டாம்… ஐபிஎல் தொடரை வெற்றிக்கரமாக முடிக்க பிசிசிஐ சூப்பர் பிளான்!

வெற்றிகரமாக பாதி போட்டிகள் நடந்துமுடிந்திருந்த நிலையில் கொரோனா தனது வேலையைக் காட்டியது. அதீத கட்டுப்பாடுகளையும் மீறி பயோ பபுளுக்குள்ளும் கொரோனா நுழைந்தது. வருண் சக்கரவர்த்திக்கு தான் முதன் முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது. எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனவும், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் எனவும் பிசிசிஐ அறிவித்தது.

Confirmed: Remaining IPL matches to be played in UAE | cricket.com.au

எஞ்சிய அனைத்து போட்டிகளையும் எந்தவிதமான குளறுபடிகளும் இல்லாமல் கொரோனாவுக்கு எதிராக போராடி நடத்திமுடிக்க பிசிசிஐ திட்டம் தீட்டியிருக்கிறது. எக்காரணம் கொண்டும் கொரோனா உள்ளே நுழையவே கூடாது என்பதில் பிசிசிஐ தெளிவாக இருக்கிறது. அதற்காக புதிய விதிகளை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி பேட்ஸ்மேன் அடித்த ஸ்டேடியத்துக்கு வெளியே அல்லது ஸ்டாண்டில் விழுந்தால் அதனை நான்காவது அம்பயர் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் அந்தப் பந்துக்குப் பதிலாக புதிய பந்தை கொடுக்க வேண்டும். சுத்தப்படுத்திய பந்தை மீண்டும் அடுத்த முறை பயன்படுத்தலாம்.

மீண்டும் ரிஸ்க் வேண்டாம்… ஐபிஎல் தொடரை வெற்றிக்கரமாக முடிக்க பிசிசிஐ சூப்பர் பிளான்!

அறிவியல்படி பந்துகள் வழியாக கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்றாலும் பிசிசிஐ ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதேபோல மைதானத்தில் எங்கேயும் எச்சில் துப்பக் கூடாது. அதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பயோ பபுளுக்குள் வருவதற்கு முன்னர் 3 கொரோனா நெகட்டிவ் டெஸ்ட்களை எடுக்க வேண்டும். ஆறு நாட்கள் வரை தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். அணி நிர்வாகிகள், வீரர்கள், ஊழியர்கள் என அனைவருமே கொரோனா தடுப்பூசி கட்டாயம் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

IPL 2020: Don't you dare break Covid-19 protocols, BCCI warns players |  Business Standard News

மைதானத்தில் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாகவும் பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. ஆகவே ஒருவேளை ரசிகர்களை அனுமதிக்கும் பட்சத்தில், யாரோ ஒரு ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்து வீரரைக் கட்டிப்பிடித்தால், அந்த வீரர் தன்னுடைய உடையை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல ஒரு அணி வீரர்கள் மற்ற அணி வீரர்களைச் சந்தித்த பிறகு கையை சோப் போட்டு 20 நொடிகளுக்கு வரை நன்கு கழுவ வேண்டும். பிரேக்கில் சப் வீரர்கள் ட்ரிங்ஸ் எடுத்துவந்தால் ஒவ்வொரு வீரரும் ஒரு பாட்டிலை மற்ற வீரர்களுக்கு ஷேர் செய்யக் கூடாது. தனித்தனி பாட்டில்களில் தான் குடிக்க வேண்டும்.