ஒரு வெற்றியில் இரு இடங்கள் முன்னேறிய CSK – பாயிண்ட் டேபிள் அப்டேட்

 

ஒரு வெற்றியில் இரு இடங்கள் முன்னேறிய CSK – பாயிண்ட் டேபிள் அப்டேட்

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரு போட்டிகளை நடத்தி வருகிறது ஐபிஎல் நிர்வாகம். ஆனால், ஐக்கிய அமீரகத்தில் அடிக்கும் வெப்பம்தான் வீரர்களைப் பயமுறுத்துகிறது.

ஒவ்வொரு டீம்களும் 4 அல்லது 5 போட்டிகளில் ஆடி விட்டன. இனி, ஒவ்வொரு போட்டியுமே முக்கியமானது. ஏனெனில் பாயிண்ட் டேபிளில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதியாகும். அதனால், இனி நடக்கும் போட்டிகள் கூடுதல் விறுவிறுப்பு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒரு வெற்றியில் இரு இடங்கள் முன்னேறிய CSK – பாயிண்ட் டேபிள் அப்டேட்

மொத்தம் எட்டு அணிகள் கொண்ட பாயிண்ட் டேபிளில் கடைசி இடத்தில் இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்றையை அசத்தலான வெற்றியில் இரு அணிகளை கீழே இறக்கி 6 -ம் இடத்திற்கு முன்னகர்ந்திருக்கிறது.

ஆமாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் ஆடி 2 -ல் வென்று, மூன்றில் தோற்றது. அதனால் 4 பாயிண்டுகள் பெற்றது. இதே நிலைதான் ஹைதராபாத் அணிக்கும். ஆனால், அதன் நெட்ரன்ரேட் -0.417 ஆக இருக்கிறது. நேற்று விக்கெட் பறிக்கொடுக்காமல், 14 பந்துகள் மீதமிருக்கையில் வென்றதால் சென்னையின் நெட் ரன்ரேட் அதிகரித்து -0.342 ஆக இருக்கிறது. இதனால், சென்னை அணி 6-ம் இடத்திலும் ஹைதராபாத் 7-ம் இடத்திலும் உள்ளன. எட்டாம் இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. இது 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.

ஒரு வெற்றியில் இரு இடங்கள் முன்னேறிய CSK – பாயிண்ட் டேபிள் அப்டேட்

முதல் இடத்தில் 5 போட்டிகளில் 3-ல் வென்று 6 பாயிண்ட்டுகளோடு மும்பை இண்டியன்ஸ் உள்ளது. இரண்டாம் இடத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் 6, மூன்றாம் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 பாயிண்டுகளோடு உள்ளன. இன்றைக்கு எந்த அணி வெல்கிறதோ அந்த அணி பாயிண்ட் டேபிளில் நம்பர் 1 இடத்துக்குச் சென்றுவிடும். நெட் ரன்ரேட் படி தோற்ற அணிக்கு எந்த இடம் என முடிவாகும்.

ஒரு வெற்றியில் இரு இடங்கள் முன்னேறிய CSK – பாயிண்ட் டேபிள் அப்டேட்


நான்காம் இடத்தில் இரண்டில் வென்று, இரண்டில் தோற்று 4 பாயிண்டுகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருக்கிறது. இனி, ஒவ்வொரு மேட்ச்க்கும் பாயிண்ட் டேபிளில் மாற்றங்கள் இருக்கும். பாயிண்ட் டேபிள் பற்றிய கணக்குகள் தீவிரமாக அலசப்படும்.