கடைசி இடத்தில் சென்னை… மற்ற அணிகள்? ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்!

கடைசி இடத்தில் சென்னை… மற்ற அணிகள்? ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்!

ஐபிஎல் 2020 போட்டிகள் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. இதுவரை மட்டுமே 4 ஆட்டங்களில் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி, தோல்வி முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஒரே நாளில் இரண்டு சூப்பர் ஓவர் போட்டிகள். ஒரு போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்கள் எனும் வரலாற்றுச் சம்பவம் நடந்ததும் இந்த ஐபிஎல் போட்டியில்தான்.

கடைசி இடத்தில் சென்னை… மற்ற அணிகள்? ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்!

இப்போது எல்லோரின் கவனமும் குவிந்திருக்கும் ஒரே இடம் பாயிண்ட் டேபிள்தான். முதல் நான்கு இடங்களில் வெல்லும் அணிகளே பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல முடியும். அதனால், ஒவ்வோர் அணியும் கடும் போராட்டத்தை அதற்காகச் செய்து வருகின்றன. இந்தப் பரபரப்பன சூழலில் தற்போதைய நிலவரப்படி பாயிண்ட் டேபிளில் எந்தெந்த அணிகள் எந்த இடத்தில் உள்ளது எனப் பார்ப்போம்.

கடைசி இடத்தில் சென்னை… மற்ற அணிகள்? ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்!

முதலிடத்தில் மும்பை: 11 போட்டிகளில் விளையாடி 7 ஆட்டங்களில் வென்று 14 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளது. டெல்லி, பெங்களூர் அணிகளும் 14 புள்ளிகள்தான் என்றாலும் நெட்ரன்ரேட் அடிப்படையில் மும்பை உச்சத்தில் உள்ளது.

கடைசி இடத்தில் சென்னை… மற்ற அணிகள்? ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்!

இரண்டாம் இடத்தில் டெல்லி: 11 போட்டிகளில் விளையாடி 7 ஆட்டங்களில் வென்று 14 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளைய போட்டியில் ஹைதராபாத் அணியோடு டெல்லி வென்றால் முதலிடத்திற்கு முன்னேறலாம்.

கடைசி இடத்தில் சென்னை… மற்ற அணிகள்? ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்!

மூன்றாம் இடத்தில் பெங்களூர்: முதலிடத்தில் மும்பை: 11 போட்டிகளில் விளையாடி 7 ஆட்டங்களில் வென்று 14 புள்ளிகளோடு மூன்றாம் இடத்தில் உள்ளது. புதன் கிழமை போட்டியில் மும்பையோடு மோதுகையில் யார் வெல்கிறார்களோ… அவர்கள் பட்டியலிலும் முன்னேறுவார்கள்.

கடைசி இடத்தில் சென்னை… மற்ற அணிகள்? ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்!

நான்காம் இடத்தில் கொல்கத்தா: 11 போட்டிகளில் விளையாடி 6 ஆட்டங்களில் வென்று 12 புள்ளிகளோடு நான்காம் இடத்தில் உள்ளது. இன்றைய பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் வென்றால் இந்த இடம் மீண்டும் உறுதியாகும். ஒரு இடம் முன்னேறவும் வாய்ப்பிருக்கிறது. மாறாக, அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுவிட்டால் நான்காம் இடத்தைப் பறிகொடுக்க வேண்டியிருக்கும்.

கடைசி இடத்தில் சென்னை… மற்ற அணிகள்? ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்!

ஐந்தாம் இடத்தில் பஞ்சாப்: 11 போட்டிகளில் விளையாடி 5 ஆட்டங்களில் வென்று 10 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றால் நான்காம் இடத்திற்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது.

கடைசி இடத்தில் சென்னை… மற்ற அணிகள்? ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்!

ஆறாம் இடத்தில் ராஜஸ்தான்: 12 போட்டிகளில் விளையாடி 5 ஆட்டங்களில் வென்று 10 புள்ளிகளோடு ஆறாம் இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் இருந்த ராஜஸ்தான் நேற்றைய அதிரடி வெற்றி மூலம் ஆறாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடைசி இடத்தில் சென்னை… மற்ற அணிகள்? ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்!

ஏழாம் இடத்தில் ஹைதராபாத்: 11 போட்டிகளில் விளையாடி 4 ஆட்டங்களில் வென்று 8 புள்ளிகளோடு ஏழாம் இடத்தில் உள்ளது. நாளை டெல்லியுடன் மோதும் போட்டியில் வென்றால் பட்டியலில் முன்னேறவும் வாய்ப்பிருக்கிறது.

கடைசி இடத்தில் சென்னை… மற்ற அணிகள்? ஐபிஎல் பாயிண்ட் டேபிள் நிலவரம்!

எட்டாம் இடத்தில் சென்னை: 12 போட்டிகளில் விளையாடி 4 ஆட்டங்களில் வென்று 8 புள்ளிகளோடு கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோய்விட்ட நிலையில் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் அதிக ரன்ரேட் கிடைக்கும் விதமான வெற்றிகளை சென்னை பெறும்பட்சத்தில் கடைசி இடம் எனும் பெயரிலிருந்து மீள முயலலாம். எந்த ஐபிஎல் போட்டியிலும் பிளே ஆப் சுற்று தகுதி இல்லாமல் சென்னை விலகியதில்லை. இதுவே முதல்முறை.