#WhistlePodu தாஜ் ஹோட்டலின் அட்டகாசமான ஐபிஎல் மினியேச்சர்

 

#WhistlePodu தாஜ் ஹோட்டலின் அட்டகாசமான ஐபிஎல் மினியேச்சர்

ஐபிஎல் போட்டிகளின் வருகை கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றி அமைத்துவிட்டது. அது ஒரு விளையாட்டுப் போட்டி என்பதைத் தாண்டி மாபெரும் கேளிக்கை கொண்டாட்டாமாக மாறிவிட்டது.

மூன்று மணி நேர விறுவிறுப்பான சினிமாவைப் பார்க்கும் மனநிலைக்கு ஐபிஎல் போட்டி பார்வையாளர்களை மாற்றிவிட்டது என்றும் சொல்லலாம்.

#WhistlePodu தாஜ் ஹோட்டலின் அட்டகாசமான ஐபிஎல் மினியேச்சர்

கொரொனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் மேட்ச், ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதிதான் தொடங்குகிறது. போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

பலரும் ஐபிஎல் போட்டியைத் தங்கள் அளவில் விதம்விதமாகக் கொண்டாட தொடங்கிவிட்டனர். துபாய் தாஜ் ஹோட்டலில் ஐபிஎல் மினியேச்சர் ஒன்றைச் செய்து எல்லோரின் கவனத்தை ஈர்த்துவருகின்றனர்.

#WhistlePodu தாஜ் ஹோட்டலின் அட்டகாசமான ஐபிஎல் மினியேச்சர்

பச்சை நிற மைதானத்தில் ஸ்டெம்ப், பேட்ம் பால், ஹெல்மெட், பேட் அனைத்தும் மினியேச்சரில் தத்ரூபமாகச் செய்து அசத்தியிருக்கிறார்கள். இது கொரோனா காலம் என்பதால் மாஸ்க்கும் வைத்து கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலாளர் ரஸல் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வாழ்த்துகளைச் சொல்லி கமெண்ட் செய்துவருகிறார்கள். ஐபிஎல் ஃபீவர் ஸ்டார்ட் ஆயிடுச்சு மக்களே…  இனி நவம்பர் வரை அதகளம்தான்.