ஐபிஎல்: 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

 

ஐபிஎல்: 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டின் 42வது ஆட்டத்தில் , மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியிலிருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் ராணா களமிறங்கினார். ஆட்டத்தின் துவக்கத்திலேயே கொல்கத்தா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் 9 ரன்னிலும்,ராகுல் திரிபாதி 13 ரன்னிலும், கார்த்திக் 13ரன்னிலும் அவுட் ஆகினர். அதன்பின் ராணா மற்றும் சுனில் நரைன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். நரைன் 64 ரன்னிலும், ராணா 87 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எட்டியது.

ஐபிஎல்: 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

195 என்ற கடின இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் தவான் களமிறங்கினர். ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும் தவான் 6 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த அய்யர் 47 ரன்களும் ரிஷப் பன்ட் 27 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி நான்காவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.