ஐபிஎல் இறுதிப்போட்டி: 5ஆவது முறையாக கோப்பை வென்று மும்பை அணி சாதனை

 

ஐபிஎல் இறுதிப்போட்டி: 5ஆவது முறையாக கோப்பை வென்று மும்பை அணி சாதனை

2020 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. முதல் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் டெல்லி அணியும் , நடப்பு சாம்பியனான மும்பை அணி 5வது முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது.

Image

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஸ்டாய்னிஸ் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஸ்டாய்னிஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த ரகானே 2 ரன்களிலும்,ஷிகர் தவான் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். இருவரும் அரைசதம் அடித்தனர். ரிஷப் பண்ட் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்ததும் டெல்லி அணியின் ரன்ரேட் குறைய தொடங்கியது. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 65 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஐபிஎல் இறுதிப்போட்டி: 5ஆவது முறையாக கோப்பை வென்று மும்பை அணி சாதனை

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் டி காக் ஆகியோர் களமிறங்கினர். அதிரடி தொடக்கம் தந்த இந்த ஜோடி 4 ஓவர்களில் 45 ரன்கள் குவித்து முதல் விக்கெட்டை இழந்தது. டி காக் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யக்குமார் யாதவ் அடுத்து களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 90 ஆக உயர்ந்தபோது சூர்ய குமார் யாதவ் 19 ரன்களில் ரன் அவுட் ஆகினார்.

அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் அடித்தார். தொடர்ந்து 68 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த பொல்லார்டு 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 18.4 ரன்களில் 5விக்கெட்களை இழந்து 157 ரன்களை எடுத்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்று, 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.