சென்னை அணிக்கு வந்தது‘ஸ்பார்க்’… பெங்களூரை வீழ்த்தி வெற்றி!

 

சென்னை அணிக்கு வந்தது‘ஸ்பார்க்’… பெங்களூரை வீழ்த்தி வெற்றி!

ஐபிஎல் தொடரின் 44-வது லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது. பெங்களூர் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதாலும்,சென்னை அணி கடைசி இடத்தை தவிர்க்க வேண்டுமென்பதாலும் இரு அணிகளும் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக பின்ச் மற்றும் படிக்கல் களமிறங்கினர். பின்ச் 15 ரன்களிலும் படித்தல் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு கேப்டன் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். டிவில்லியர்ஸ் 39 ரன்களிலும் கோலி 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே எடுத்தது.

சென்னை அணிக்கு வந்தது‘ஸ்பார்க்’… பெங்களூரை வீழ்த்தி வெற்றி!

146 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்வாட் மற்றும் பாப் டு பிளசிஸ் களமிறங்கினார். பாப் டு பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார் அதன்பிறகு ராயுடு மற்றும் கெய்வாட் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்ற தோனியின் கருத்துக்கு பதிலடி தரும் விதத்தில் கெய்வாட் பில்டிங் மற்றும் பேட்டிங்கில் கலக்கினார். அதிரடியாக ஆடிய ராயுடு 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கெய்வாட் 65 ரன்களுடனும் தோனி 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதால் சென்னை அணி 7 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தோல்வியடைந்த பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது.