’கோப்பை இந்த அணிக்குத்தான்’ அடித்துச் சொல்கிறார் ஐபிஎல் வர்ணனையாளர் கெவின் பீட்டர்சன்

’கோப்பை இந்த அணிக்குத்தான்’ அடித்துச் சொல்கிறார் ஐபிஎல் வர்ணனையாளர் கெவின் பீட்டர்சன்

ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் ஆறே நாட்கள்தான் இருக்கின்றன.

கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், செப்டம்பர் 19-ம் தேதியில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

’கோப்பை இந்த அணிக்குத்தான்’ அடித்துச் சொல்கிறார் ஐபிஎல் வர்ணனையாளர் கெவின் பீட்டர்சன்

முதல் போட்டியில் மோதுகின்றன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  அநேகமாக அடுத்த வாரம் இந்நேரம் முதல் போட்டி முடிவடைந்திருக்கும். மும்பை இண்டியன்ஸ் அணியும். இதில் யார் வென்றிருப்பார்கள் என்று தெரிந்திருக்கும்.

ஒவ்வோர் அணியும் பயிற்சியில் மும்முரமாக உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே இம்முறை கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்திருந்தார்.

’கோப்பை இந்த அணிக்குத்தான்’ அடித்துச் சொல்கிறார் ஐபிஎல் வர்ணனையாளர் கெவின் பீட்டர்சன்

பிரெட் லீ மட்டுமல்ல பலரின் இந்த ஐபிஎல் கோப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே என்கிறார்கள். அதற்கு காரணமும் இருக்கிறது. இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையைத் தனதாக்கிக் கொண்டது. சென்ற ஆண்டு இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியிடம் ஒரே ஒரு ரன்னில் வெற்றியை இழந்தது.

’கோப்பை இந்த அணிக்குத்தான்’ அடித்துச் சொல்கிறார் ஐபிஎல் வர்ணனையாளர் கெவின் பீட்டர்சன்

ஐபிஎல் போட்டியில் பிரபல வர்ணனையாளரும் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேனுமாகிய கெவின் பீட்டர்சன் தனது கணிப்பை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

’மிகுந்த ஆர்வத்துடன் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள போகிறேன். கோப்பை வெல்லும் என நான் நம்புவது டெல்லி கேபிட்டல் அணியே’ என்று தெரிவித்துள்ளார்.

’கோப்பை இந்த அணிக்குத்தான்’ அடித்துச் சொல்கிறார் ஐபிஎல் வர்ணனையாளர் கெவின் பீட்டர்சன்

மூன்று  ஆண்டுகள் டெல்லி அணியில்தான் ஐபிஎல் போட்டியில் ஆடினார் கெவின் பீட்டர்சன். அந்த விஸ்வாசத்தில் இப்படிச் சொல்லியிருக்கக்கூடும். ஸ்ரேயர் ஐயர் தலைமையிலான அணியில், ஷிகர் தவான், அஸ்வின், மார்கஸ் ஸ்டொனிஸ், இஷந்த் ஷர்மா, ரெஹேனா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட திறமையான வீரர்கள் இருந்தபோதிலும் அந்த அணிக்கான வெற்றி வாய்ப்பு குறைவு என்பதே பொதுவான கணிப்பு.