ஐபிஎல் வர்ணனையாளர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் டீன் ஜோன்ஸ் மரணம்

 

ஐபிஎல் வர்ணனையாளர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் டீன் ஜோன்ஸ் மரணம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் புகழ்பெற்ற முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் இன்று மரணம் அடைந்தார்.

1961 ஆம் ஆண்டு பிறந்தவர் டீன் ஜோன்ஸ். தனது 23 வது வயதில் ஆஸ்திரேலிய அணிகாக ஆடத்தொடங்கியவர். சுமார் பத்தாண்டுகள் அணியில் நீடித்தார்.

ஐபிஎல் வர்ணனையாளர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் டீன் ஜோன்ஸ் மரணம்

52 டெஸ்ட் மேட்ச்களில் ஆடி 3,631 ரன்களை எடுத்துள்ளார். இதில் 11 சதங்களும் அடக்கம். ஒரு போட்டியில் எடுத்த அதிபட்ச ஸ்கோர் 216. 164 ஒருநாள் போட்டிகளில் ஆடி, 6,068 ரன்கள் எடுத்துள்லார். இதில் 7 சதங்களும் 14 அரை சதங்களும் அடக்கம். ஒரு போட்டியில் அதிகபட்ச ரன் 145. பேட்டிங்கைப் போலவே பவுலிங்கிலும் குறிப்பிட்ட அளவு பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்.

தற்போது ஐபிஎல் வர்ணனையாளராக வந்திருந்த டீன் ஜோன்ஸ்க்கு திடீரென்று மாரடைப்பு வந்தது. முதலுதவி சரியான நேரத்தில் கொடுத்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

ஐபிஎல் வர்ணனையாளர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் டீன் ஜோன்ஸ் மரணம்

டீன் ஜோன்ஸ் மரணத்திற்கு பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பல சர்ச்சைகளிலும் டீன் ஜோன்ஸ் பெயர் அவ்வப்போது அடிபடும். தோனியை விட கோலியே இந்திய அணிக்கு சிறந்த கேப்டன் எனும் தொனியில் இவர் பேசியது விவாதத்தைக் கிளப்பியது. அதேபோல, பங்களாதேஷ் பிரிமீயர் லீக் போட்டியின்போது ஒரு வீரரிடம் அவமரியாதையாகப் பேசினார் என்றும் சர்ச்சை கிளம்பியது.