Home விளையாட்டு கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய 49 ஆவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்தால் கொல்கத்தா பேட்டிங் செய்தது. சென்னை அணியில் டுபிளசி, இம்ரான் தாகிர், மோனு குமார் நீக்கப்பட்டு ஷேன் வாட்சன், லுங்கிடி, கரண் சர்மா சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ரிங்கு சிங் தேர்வானார்.

கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். போட்டியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 87 ரன்களும் சுப்மன் கில் 26, தினேஷ் கார்த்திக் 21 ரன்களை எடுத்தனர் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு கொல்கத்தா அணி 172 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் லுங்கிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி. வாட்சன் மற்றும் ராயுடு ஜோடி 50 ரன்களுக்கு மேல் எடுத்து அதிரடியாக விளையாடியது. இதனையடுத்து ருதுராஜூடன் அம்பதி ராயுடு இணைந்தார். இருவரும் துரிதமாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்தினர். ருதுராஜ் அரைசதத்தை கடந்தார். ராயுடு 38 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சென்னை அணியின் கேப்டன் தோனி களமிறங்கினார். ஆனால் பெரிதாக விளையாடவில்லை. ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். அதிகபட்சமாக ஜடஜா 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்த சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

மாவட்ட செய்திகள்

Most Popular

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தேனி தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி...

சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆம்பூர்...

விஜய் மக்கள் இயக்கத்தின் யூ-டியூப் சேனல் : அதிகாரப்பூர்வ தகவல்!

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் மக்கள்...

முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்!

வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்துள்ளார். வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்...
Do NOT follow this link or you will be banned from the site!