“ஏலத்தில் தோனியின் கண் இந்த 2 பிளேயர்ஸ் மேல தான் இருக்கும்”

 

“ஏலத்தில் தோனியின் கண் இந்த 2 பிளேயர்ஸ் மேல தான் இருக்கும்”

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதற்கான மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. மொத்தமாக ஒவ்வொரு அணிக்கும் 61 வீரர்கள் தேவைப்படுகின்றனர். ஏலப் பட்டியலில் 292 வீரர்கள் இருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை இந்த ஏலம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இன்னும் ஓரிரு வருடங்களில் தல தோனி ஐபிஎல் தொடருக்கும் முழுக்கு போடுவார். அதனால் அணியைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

“ஏலத்தில் தோனியின் கண் இந்த 2 பிளேயர்ஸ் மேல தான் இருக்கும்”

முந்தைய சீசன்களில் டாடி ஆர்மி என்று விமர்சிக்கப்பட்ட அணியின் மூத்த வீரர்களின் அனுபவம் அணிக்கும் பலமாக அமைந்தது. ஆனால், சென்ற சீசனில் அதே அணி தான் பலவீனமாகவும் மாறியது. வரலாற்றிலேயே மோசமான சீசனாக சிஎஸ்கேவுக்கு அமைந்தது. இதனால் அதிரடியாக சீனியர் வீரர்களைத் தோனி ஓரங்கட்டினார். கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லா, ஹர்பஜன், முரளி விஜய் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களை எடுக்கும் திட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

“ஏலத்தில் தோனியின் கண் இந்த 2 பிளேயர்ஸ் மேல தான் இருக்கும்”

ஒவ்வொரு அணியிலும் 25 உள்ளூர் வீரர்களும், 8 வெளிநாடு வீரர்களும் இருக்க வேண்டும். சென்னைக்கு 1 வெளிநாட்டு வீரரும், 6 உள்ளூர் வீரர்களும் தேவைப்படுகின்றனர். சென்னையின் கையில் 22.9 கோடி ரூபாய் இருக்கிறது. ஏலத்தில் தோனியின் சாய்ஸாக எந்தெந்த வீரர்கள் இருப்பார்கள் என ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். கேதார் ஜாதவை மறுபடியும் அணிக்குள் எடுக்க தோனி திட்டமிடலாம் என்று கூறி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்.

“ஏலத்தில் தோனியின் கண் இந்த 2 பிளேயர்ஸ் மேல தான் இருக்கும்”

அதற்கான விளக்கத்தையும் அவரே கொடுக்கிறார். “சென்ற முறை கேதார் ஜாதவ்வை 8 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தார்கள். இது அதிகபட்சம் என்று எண்ணி, அவரை விடுவித்து குறைந்த விலையில் மீண்டும் ஏலம் எடுக்கும் திட்டம் சென்னைக்கு இருக்கலாம். அவரைத் தவிர அவர்கள் விடுவித்த வேறு எந்த வீரர்களையும் மீண்டும் எடுக்க மாட்டார்கள்.

“ஏலத்தில் தோனியின் கண் இந்த 2 பிளேயர்ஸ் மேல தான் இருக்கும்”

அதேபோல அணிக்கு ஒரெயொரு வெளிநாட்டு வீரர் மட்டுமே தேவைப்படுகிறார். என்னுடைய கணிப்பு சரி என்றால் தோனி ஷகிப் அல் ஹசன் அல்லது மொயின் அலியைத் தேர்வுசெய்வார். அவரைப் பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தும் வீரரை மட்டுமே விரும்புவார். அவர்கள் இருவருக்கும் நல்ல அனுபவம் இருப்பதால் அவர்களில் ஒருவரை ஏலம் எடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன” என்றார்.

“ஏலத்தில் தோனியின் கண் இந்த 2 பிளேயர்ஸ் மேல தான் இருக்கும்”

ஆனால் சிலர் சிறந்த ஓபனராக ஷேன் வாட்சன் இருந்தார். தற்போது அவருக்கு மாற்றாக ஒரு ஓபனிங் அதிரடி வீரரை எடுக்க வேண்டும். அவர் இடத்தை நிரப்ப ஒரு பேட்ஸ்மேனை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. சிஎஸ்கே பயிற்சியாளர் பிளேமிங்கின் கண் நியூஸிலாந்து வீரர் டிம் செய்பெர்ட் பக்கம் இருப்பதாகவும் யூகிக்கப்படுகிறது.