அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள் சேர்ப்பு: பிசிசிஐ

 

அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள் சேர்ப்பு: பிசிசிஐ

2022 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கின் போது இரண்டு புதிய உரிமையாளர்களை சேர்ப்பதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 5000 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் எனவும், நடைமுறையிலுள்ள எட்டு அணிகள் கொண்ட போட்டியாக இருக்கும் ஐபிஎல் தொடர், அடுத்த சீசனிலிருந்து 10 அணிகளாக மாறும் மற்றும் இதற்கான ஏல முறைகள் இன்னும் சிறிது காலத்தில் தொடங்கும் எனவும் அண்மையில் நடந்த பிசிசிஐ-யின் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள் சேர்ப்பு: பிசிசிஐ

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று அணிகளை ஏலம் எடுக்க 10 லட்சம் ரூபாய் செலுத்தி விண்ணிக்குமாறு பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த சீசன்களில் புதிய அணிகளுக்கான அடிப்படை விலை ஆயிரத்து 700 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அடிப்படை விலையை 2000 கோடி ரூபாயாக நிர்ணயிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “கடந்த காலங்களில் ஐபிஎல் அணிகளை ஏலமெடுக்கும் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே கண்டுள்ளன. ஆகவே பெரிய வணிக நிறுவனங்கள் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு, பெரிய அளவில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் 5000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.3000 கோடி வருவாய் உள்ள நிறுவனங்கள் மட்டுமே ஐபிஎல் அணிகளை ஏலம் எடுக்க அனுமதிக்கப்படும். அடுத்த சீசனில் 74 ஐபிஎல் போட்டிகள் இருக்க வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.

அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள் சேர்க்கப்படுவதில் ரசிகர்களுக்கு பெரிதாக ஆர்வம் இல்லை என்றே சொல்லலாம். காரணம், கடந்த காலங்களில் இதுபோல் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்ட போது அந்த இரண்டு அணிகளுக்கும் வலுவான வீரர்கள் மற்றும் நட்சத்திர வீரர்கள் இல்லை. ஏற்கனவே உள்ள அணிகள் தங்கள் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதால் இந்த புதிய 2 அணிகளுக்கு நட்சத்திர மற்றும் சிறந்த வீரர்கள் கிடைப்பதில்லை. ஆதலால் இம்முறை அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் விதிகள் மாற்றப்படும் என தெரிகிறது.