Home விளையாட்டு #IPL2021: ஐபிஎல் போட்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டம்

#IPL2021: ஐபிஎல் போட்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டம்

விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நடப்பு ஐபிஎல் தொடரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நேற்று பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற இருந்த போட்டி தேதி குறிப்பிடாமல் இன்னொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட இரு வீரர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர், மீதமுள்ள வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

#IPL2021: ஐபிஎல் போட்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டம்
BCCI does not rule out the possibility of IPL returning this year

இது தவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள ஒரு சிலரும் கொரோனா வைரஸால் பாதித்திருந்தனர். இந்நிலையில் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் விருத்திமான் சஹா மற்றும் டெல்லி கேப்பிடல்ஸின் அமித் மிஸ்ரா ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் , நடப்பு ஐபிஎல் தொடர் நடத்துவதற்கு மேலும் தலைவலியாக அமைந்தது. பாதுகாப்பு வளையமாக இருந்த பையோ பபுளினுள் வைரஸ் ஊடுருவியதால், வேறு வழியில்லாமல் , நடப்பு ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பதாக இன்று அறிவித்தது பிசிசிஐ. தற்போது பிசிசிஐ அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் உறுப்பினர்களையும், பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்புவதில் கவனம் செலுத்தி வருகிறது.

இதற்கிடையில், நியூசிலாந்திற்கு எதிரான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கும், ஜூன் முதல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பரில் நடத்த அணியின் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்குள் வெளிநாட்டு வீரர்களும் டி 20 உலகக் கோப்பைக்கு தயாராக இருப்பார்கள் என்று அணியின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் கருதுகின்றனர்.

IPL 2020 to begin from September 19 in UAE: Brijesh Patel | Cricket News

செப்டம்பர் மாத மத்தியில் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் தொடர் முடிகிறது , அதன்பின் டி20 உலக கோப்பை வரை இந்திய அணிக்கும் பல சர்வதேச அணிகளுக்கும் தொடர் இல்லாததால் செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. ஏனெனில் டி20 உலகக் கோப்பைக்கு வீரர்கள் தயாராகும் வகையில் இருக்கும் என்பதால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதற்கு ஒப்புக் கொள்ளும் என அதிகாரிகள் நம்புவதாக கிரிக்பஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கூறுகையில் “இப்போது நாம் ஐபிஎல் போட்டிகள் நடத்த சர்வதேச அணிகளின் அட்டவணையின்படி, தேதிகள் கிடைக்குமா என ஆராய வேண்டும். தேதிகள் கிடைக்கும் பட்சத்தில் , அதைப் பற்றி ஆராய்ந்து முடிவு எடுப்போம். செப்டம்பரில் இது சாத்தியமா என்று நாம் பார்க்க வேண்டும். ஐ.சி.சி மற்றும் பிற வாரியங்களின் அட்டவணைகளை ஆராய்ந்து அந்தந்த வாரியங்கள் உடன் கலந்து முடிவு எடுக்கப்படும்” எனக்கூறினார்.

#IPL2021: ஐபிஎல் போட்டிகளை செப்டம்பரில் நடத்த பிசிசிஐ திட்டம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா கட்சிகள் ரூ.10 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க, அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசுக்கு, இது...

வாரத்தில் இத்தனை மணி நேரம் வேலை செய்பவர்களா நீங்கள்? – உயிருக்கே ஆபத்து!

வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்பவர்களுக்கு உயிருக்கு ஆபத்து என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் இத்தகைய...

தொகுதி மக்களுக்காக களமிறங்கிய ஸ்டாலின்… வியக்கும் திமுகவினர்!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள இந்த காலகட்டம் மிகவும் சவாலானதாக உள்ளது. கொரோனா பேரிடரை எதிர்கொள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக அரசு...

முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால், கொரனோ சிகிச்சை மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தாராளமாக நிதி வழங்குமாறு...
- Advertisment -
TopTamilNews