ஐபிஎல் 2021: 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

 

ஐபிஎல் 2021: 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது போட்டி ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர்.நல்ல துவக்கம் தந்த இந்த ஜோடி முதல் விக்கெட்க்கு 53 ரன்களை சேர்த்தது.பின்னர் வந்த திரிபாதி , ராணா உடன் சேர்ந்து அதிரடியாக ஆடினார்.சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்தனர்.திரிபாதி 53 ரன்களிலும் , ராணா 80 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதிக்கட்டத்தில் அதிரடியாக தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை சேர்த்தது.ஹைதராபாத் சார்பில் அசத்தலாக பந்து வீசிய ரசித் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Image

188 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் வார்னர் 3 ரன்களிலும் , சாகா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.இதன் மனிஷ் பாண்டே மற்றும் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்த்தனர்.அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோவ் 32 பந்துகளில் 3 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார்.இந்த ஜோடியை பிரிக்க 13வது ஓவரை கம்மின்ஸிடம் கொடுத்தார் மோர்கன் , சிறப்பாக வீசிய கம்மின்ஸ் 2 ரன் மட்டும் விட்டு கொடுத்து முக்கியமான பேர்ஸ்டோவ் விக்கெட்யை வீழ்த்தினார்.இதன்பின் நபி 14 ரன்களிலும் , விஜய் சங்கர் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க ,கடைசி ஓவரில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டது.ஆனால் அந்த அணி கடைசி ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தது.20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.