#IPL2021: காயம் காரணமாக சன் ரைசர்ஸ் அணியிலிருந்து நடராஜன் விலகல்!

 

#IPL2021: காயம் காரணமாக சன் ரைசர்ஸ் அணியிலிருந்து நடராஜன் விலகல்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான நடராஜன் காயத்தினால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு , இந்திய அணிக்காக ஒரு நாள் கிரிக்கெட், டி20 உள்ளிட்ட கிரிக்கெட்டில் விளையாடி சிறப்பான பங்களிப்பை செய்து வந்தார்.

#IPL2021: காயம் காரணமாக சன் ரைசர்ஸ் அணியிலிருந்து நடராஜன் விலகல்!

இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நடராஜன் , மூன்றாவது போட்டியில் இருந்து விளையாடும் 11 பேர் கொண்ட வீரர்களில் தேர்வு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாக இயக்குனர் டாம் மூடி கூறுகையில், நடராஜனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நடராஜன், முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதாகவும் , காயத்தின் வீரியம் தொடர்ந்து அதிகரிப்பதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சன்ரைசர்ஸ் அணி மட்டும் அல்லாது ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.