#IPL2021: 2வது முறையாக வெற்றிவாகை சூடிய பெங்களூரு அணி!

 

#IPL2021: 2வது முறையாக வெற்றிவாகை சூடிய பெங்களூரு அணி!

நடப்பு ஐபிஎல் தொடரின் 6வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் முதல் போட்டியில் பெங்களூரு அணியை வெற்றியையும், ஹைதராபாத் அணி தோல்வியையும் சந்தித்திருந்தது.

Image

டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் ஒரே ஒரு மாற்றமாக இளம் வீரர் ரஜட் படிதர் நீக்கப்பட்டு கொரானாவிலிருந்து மீண்ட தேவ்தட் படிக்கல் சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியை பொறுத்தவரை முகமது நபி,சந்தீப் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹோல்டர் மற்றும் சபாஷ் நதீம் சேர்க்கப்பட்டனர்.

பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினார். படிக்கல் 11 ரன்களிலும் அடுத்து வந்த சபாஷ் அகமது 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் மேக்ஸ்வெல் மற்றும் கோலி ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். கோலி 33 ரன்களிலும் அடுத்து வந்த டிவில்லியர்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க பெங்களூர் அணியின் ரன் ரேட் சரிந்தது. மேக்ஸ்வெல் மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 59 ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும்,ரசித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Image

150 என்ற சவாலான இலக்கை துரத்திய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாகா மற்றும் வார்னர் களமிறங்கினர்.சாகா 1 ரன்னில் சிராஜ் பந்தில் வீழ்ந்தார்.பின் மனிஷ் பாண்டே மற்றும் வார்னர் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர்.பவர்பிளே ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய வார்னர் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் மனிஷ் பாண்டே 38 ரன்களில் ஆட்டமிழக்க , மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தொடரில் பெங்களூர் அணி பெறும் இரண்டாவது வெற்றியாகும்