தோனிக்கு எதிராக விளையாட காத்திருக்கிறேன் – ரிஷப் பந்த்

 

தோனிக்கு எதிராக விளையாட காத்திருக்கிறேன் – ரிஷப் பந்த்

14-வது ஐபிஎல் டி20 தொடர் வரும் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 10-ம் தேதி மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதால், அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ரிஷப் பந்த் ஏற்றுள்ளார்.

இந்நிலையில் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், டெல்லி கேபிடல்ஸ் அணி வரும் 10-ம் தேதி மோதுகிறது. இது தொடர்பாக டெல்லி அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள காணொளியில் , ரிஷப் பந்த் அளித்துள்ள பேட்டியில், “கடந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணி 2-வது இடம் பிடித்தது. இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லக் கடுமையாக முயல்வோம். எனக்குக் கிடைக்கும் பல வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்த முயல்வேன். கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். சிறப்பாகத் தயாராகி வருகிறோம். ஒவ்வொரு வீரரும் தங்கள் மனதில் கற்பனையோடு இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் 100 சதவீதம் உழைப்பைக் கொடுத்து வருகிறார்கள். அதுதான் அணியின் மகிழ்ச்சியான சூழலுக்கு உதவும். கேப்டனாக அதுதான் எனக்குத் தேவை.

தோனிக்கு எதிராக விளையாட காத்திருக்கிறேன் – ரிஷப் பந்த்

பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பணி கடந்த 3 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. அணிக்குள் புதிய உற்சாகத்தை எடுத்து வந்துள்ளார். ஒரு வீரராகப் பயிற்சியாளரைப் பார்க்கும்போது, அவரிடம் இருந்து அதிகமானவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோன்று பாண்டிங் இருக்கிறார். நான் கேப்டனாகப் பதவி ஏற்று, முதல் ஆட்டத்திலேயே தோனி அண்ணனுக்கு எதிராக விளையாட இருக்கிறேன். எனக்கு நிச்சயம் சிறந்த அனுபவமாக அந்தப் போட்டி இருக்கும். தோனியிடம் இருந்து ஏராளமான விஷயங்களையும், நுணுக்கங்களையும் கற்று இருக்கிறேன். எனக்கென தனியாகச் சொந்த அனுபவங்கள் இருக்கின்றன. தோனியிடம் நான் கற்றுக்கொண்ட நுணுக்கங்கள், என்னுடைய சொந்த அனுபவங்கள் ஆகியவற்றைச் சேர்த்து தோனிக்கு எதிராகப் பயன்படுத்தி, வித்தியாசமான கேப்டன்ஷிப்புடன் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவேன்” என கூறினார்.