#IPL2021: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது பஞ்சாப் அணி

 

#IPL2021: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது பஞ்சாப் அணி

நடப்பு ஐபிஎல் தொடரில் 4வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கிடையே நடைபெற்றது

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். அகர்வால் 14 ரன்களில் வெளியேற , அடுத்து வந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார்.இருவரும் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். நிதானமாக ஆடிய கெயில் 40 ரன்களில் ஆட்டமிழக்க பின் தீபக் ஹூடா களமிறங்கினார். அதிரடியாக ஆடிய கே.எல் ராகுல் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இருவரும் ராஜஸ்தான் பந்துவீச்சாளர் புரட்டி எடுத்தனர். சிக்சர்களாக பறக்கவிட்ட தீபக் ஹூடா 20 பந்துகளில் அரைசதம் கடந்தார். ருத்ரதாண்டவம் ஆடிய தீபக் ஹூடா 28 பந்துகளில்,6 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் இறுதி ஓவரில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது.

Image

இதன்பின் 222 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும்,மனன் வோரா 12 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் தனி ஒருவராக சிக்சரும் பவுண்டரிகளும் விளாச , பட்லர் 25 ரன்களிலும்,சிவம் டுபே 23 ரன்களிலும்,பராக் 25 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதிரடியாக ஆடிய சாம்சன் 54 பந்துகளில் சதமடித்தார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் , ஹர்தீப் சிங் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன் அடித்த பந்து எல்லைக் கோட்டின் அருகே கேட்ச் செய்யப்பட்டது. சாம்சங் 63 பந்துகளில் 119 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.