ஐபில் 2021: மில்லர், மோரிஸ் அதிரடியை முதல் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்

 

ஐபில் 2021: மில்லர், மோரிஸ் அதிரடியை முதல் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்

நடப்பு ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் டெல்லி கேப்பிடல் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.இதில் முதல் போட்டியில் டெல்லி அணி வெற்றியையும், ராஜஸ்தான் அணி தோல்வியையும் சந்தித்திருந்தது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை வான்கடே மைதானம் எப்போதும் பேட்டிங் செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும் , ஆனால் இன்று ஆரம்பத்திலிருந்தே பந்து வீச்சுக்கும் மைதானம் ஒத்துழைத்தது. டெல்லி அணியின் பிரித்வி ஷா 2 ரன்களிலும்,தவான் 9 ரன்களிலும்,ரஹானே 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.கேப்டன் ரிசப் பன்ட் மட்டும் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.பன்ட் 51 ரன்களில் ரன் ஆனார். பின் வந்த வீரர்களான லலித் யாதவ் 20 ரன்களும்,டாம் கரன் 21 ரன்களும், கிறிஸ் ஓக்ஸ் 15 ரன்களும் எடுக்க டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தனது இன்னிங்சில் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபில் 2021: மில்லர், மோரிஸ் அதிரடியை முதல் வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்

148 என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கும் இங்கு பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. துவக்கத்திலேயே விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிய ஆரம்பித்தன.பட்லர் 2 ரன்களிலும்,ஓஹ்ரா 9 ரன்களிலும்,கேப்டன் சஞ்சு சாம்சன் 4 ரன்களிலும் வெளியேறினார். டேவிட் மில்லர் மட்டும் தனி ஒருவனாக போராடி அரைசதம் அடிக்க மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். கடைசி 5 ஓவர்களுக்கு 58 ரன்கள் தேவை என்ற நிலையில் டேவிட் மில்லர் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசி அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார் , மில்லர் 43 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 27 ரன் தேவைப்பட்ட நிலையில் கிறிஸ் மாரிஸ் 19வது ஓவரில் 2 சிக்சர் மற்றும் கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் விளாசி ராஜஸ்தான் அணியை வெற்றிபெற செய்தார். 16.25 கோடி விலைக்கு வாங்கப்பட்ட கிறிஸ் மோரிஸ் அவ்வளவாக ஜொலிக்கமாட்டார் என்று விமர்சனங்கள் இருந்த நிலையில், இன்று 18 பந்துகளில் 36 ரன்கள் விளாசி ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்து அந்த அணி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.