ஐபிஎஸ் 2021: தனிமைப்படுத்தப்படும் இந்திய வீரர்கள்

 

ஐபிஎஸ் 2021: தனிமைப்படுத்தப்படும் இந்திய வீரர்கள்

இங்கிலாந்தில் 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், மான்செஸ்டரில் இருந்து வீரர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரும் முயற்சியில் ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.

ஐபிஎஸ் 2021: தனிமைப்படுத்தப்படும் இந்திய வீரர்கள்

இந்தியாவில் நடைபெற்ற நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக, கடந்த மே மாதம் 4-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே நடந்து முடிந்திருந்த நிலையில், 2-வது சுற்று லீக் ஆட்டங்கள், தகுதிசுற்று மற்றும் இறுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க ஏற்பாடு செய்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2-வது கட்ட ஐபிஎல் டி20 லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது.முதல் ஆட்டத்தில் ஐபிஎல்லின் தலைசிறந்த அணிகளான சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.27 நாட்கள் நடக்கும் போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்த சில வீரர்கள் பரிசோதனை முடிந்து பயோ பபுள் எனப்படும் பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 2 முறை கோவிட் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இரு பரிசோதனையிலும் நெகட்டிவ் வரும் பட்சத்தில் பயோ-பபுள் சூழலுக்குள் அனுப்பப்பட்டு, போட்டியில் பங்கேற்பார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனை உறுதி செய்யும்படி அணியின் நிர்வாகங்களுக்கு பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐபிஎஸ் 2021: தனிமைப்படுத்தப்படும் இந்திய வீரர்கள்

இங்கிலாந்தில் 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், மான்செஸ்டரில் இருந்து தங்கள் வீரர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரும் முயற்சியில் ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள் முயற்சி செய்துவருகின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம், தனது வீரர்களாக விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரை துபாய்க்கு அழைத்து வருவதற்கு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் இருவரும் நாளை அதிகாலை துபாய் சென்றடைவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்கள் வீரர்களை ஏற்கனவே தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்துள்ளது.