#IPL2021: கடைசி பந்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி!

 

#IPL2021: கடைசி பந்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி!

ஐபிஎல் தொடரின் 14வது சீசனின் முதல் போட்டி இன்று சென்னையில் தொடங்கியது. இதில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கிறிஸ் லின் களமிறங்கினர். ரோஹித் சர்மா 19 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் அசத்திய கிறிஸ் லின் 35 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சூரியகுமார் யாதவ் 36 ரன்களிலும்,இஷன் கிஷன் 28 ரன்களில் ஆட்டமிழக்க , அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷல் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் ரன்ரேட்க்கு முட்டுக்கட்டை போட்டார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

#IPL2021: கடைசி பந்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி!

160 என்ற இலக்குடன் தனது இன்னிங்ஸை தொடங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் வாசிங்டன் சுந்தர் களம் இறங்கினர். சுந்தர் 10 ரன்களிலும், படிடர் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மேக்ஸ்வெல் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். பின்னர் கோலி 33 ரன்களிலும்,மேக்ஸ்வெல் 39 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க போட்டியில் பதற்றம் உண்டானது. அதன்பின் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து நடையை கட்ட , ஏபி டிவில்லியர்ஸ் மட்டும் நின்று சிறப்பாக ஆடினார். கடைசி ஓவரில் பெங்களூரின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிவில்லியர்ஸ் 48 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். பந்துவீச்சில் கலக்கிய ஹர்ஷல் படேல் கடைசி பந்தில் 1 ரன் அடித்து வெற்றி பெற செய்தார். 20 ஓவரில் பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது, 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது