#IPL2021: கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி

 

#IPL2021: கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி

நடப்பு ஐபிஎல் தொடரின் 5வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது. மும்பை அணி தனது முதல் போட்டியில் தோல்வியையும்,கொல்கத்தா அணி தனது முதல் போட்டியும் வெற்றியும் பெற்றுள்ளது.

#IPL2021: கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய கிறிஸ் லின்னை நீக்கி அவருக்கு பதிலாக குயின்டன் டி காக் சேர்க்கப்பட்டார்.மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் டி காக் களமிறங்கினர்.ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் டி காக் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.பின்பு சூர்யகுமார் யாதவ் , ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். பவர் பிளேயில் 5 ஓவர்களை சுழற்பந்துவீச்சுக்கு கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன்ரேட்க்கு முட்டுக்கட்டை போட்டார் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன்.ரோஹித் நிதானமாக ஆட , சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார். 33 பந்துகளில் அரைசதம் அடித்த சூர்யகுமார், 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்களுடன் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் ரோகித் சர்மாவும் 42 ரன்களில் வெளியேற,பின்னர் வந்த இஷன் கிஷன்,ஹர்திக் பாண்டியா,பொல்லார்ட்,குர்னல் பண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ரன்களை எடுத்தது மும்பை அணி.
பின்னர் கொல்கத்தா அணி துவக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணா மற்றும் சப்மன் கில் களமிறங்கினர்.பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 என்ற நல்ல நல்ல நிலையில் துவங்கியது. இதன் பின் சுபமன் கில் 33 ரன்களிலும்,திரிபாதி 7 ரன்களிலும்,மோர்கன் 7 ரன்களிலும்,சாகிப் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.சிறப்பாக ஆடிய ராணா 42 பந்துகளில் அரைசதம் அடித்தார்.பின் ராணாவும் 57 ரன்களில் ஆட்டமிழக்க , போட்டியில் பதற்றம் தொற்றிகொண்டது.ஆனால் கார்த்திக் மற்றும் ரஸல் ஆகியோரும் தடுமாற கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது . இதில் கொல்கத்தா அணி 4 ரன்களை மட்டுமே எடுத்ததால் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.